25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
p34a
மருத்துவ குறிப்பு

மூட்டுத் தேய்மானத்துக்கு ஓர் முற்றுப்புள்ளி!

இளமையில் தன்னைப்பற்றி கவலைப்பட நேரமில்லாமல் குடும்பம், வேலை என்று ஓடி ஓடி உழைக்கும் பெண்களையே பெரும்பாலும் வயதான காலத்தில் தாக்குகிறது மூட்டுவலி. அதுவும் முதுமையில் மூட்டுவலி என்பது மிகவும் கொடுமை. மூட்டுவலி ஏன் வருகிறது, அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சொல்கிறார், கோவையைச் சேர்ந்த மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஷ்யாம் சுந்தர்.

மூட்டுவலிக்கான காரணங்கள்

வயதான காலத்தில் மூட்டில் ஏற்படும் தேய்மானம், மூட்டில் உள்ள நீர்ச்சத்து குறைவதாலும், ரத்தத்தின் நோய் எதிர்ப்புச் சக்தியில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் வரும் வாதம் போன்ற காரணங்களாலும் மூட்டு தேய்மானம் அடைந்து, அதன் காரணமாக மூட்டுவலி ஏற்படும். இந்தியப் பெண்களை அதிகம் பாதிப்பது வயது காரணமாக ஏற்படும் முழங்கால் மூட்டுத் தேய்மானம்தான். முதல் பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தினால் உடல் எடை அதிகரிக்கிறது. அதீத எடையால் முழங்கால் மூட்டுக்குச் செல்லும் பாரம் அதிகரித்து, எலும்புத் தேய்மானம் ஏற்பட காரணமாகிறது.

p34a

பொதுவாக, மாதவிடாய்க் காலங்களில் உடலில் சுரக்கும் ஈஸ்ட் ரோஜன், ஹார்மோன் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் கால்சியத்தை உடலில் அதிகரிக்கிறது. ஆனால், பெண்கள் 45 வயதைக் கடக்கும் போது, மாதவிலக்கு நின்றுவிடுவதால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு தடைப்படுகிறது. அதனால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆஸ்ட்ரியோபெரோசிஸ் என்னும் எலும்பு அடர்த்தி குறைதல், மூட்டுவலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. மூட்டில் உள்ள நீர்ச்சத்து குறைந்து மூட்டெலும்பு வளைந்து போனால் செயற்கை மூட்டு பொருத்துவார்கள். இது உடலுக்கு எந்த ஒவ்வாமையை யும் ஏற்படுத்தாது. இவ்வகை யான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நீண்ட வருடங்கள் பலன் தரும்” என்றவர் மூட்டு வலிக்கான சிகிச்சை முறை களைப் பற்றியும் தொடர்ந்தார்.

எப்படி மீள்வது?

“உடல் உயரத்துக்கு ஏற்ற மிகச் சரியான எடையில் இருத்தல், உடலில் கொழுப்புகள் சேராமல் இருக்க நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் ஆகியவற்றோடு மாதம் ஒருமுறை பிஎம்ஐ (பாடி மாஸ் இண்டக்ஸ்) அளவை கண்காணிக்க வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானியங்கள், பருப்பு, நட்ஸ், பழங்கள், விட்டமின் – டி நிறைந்த உணவுகள், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். மருத்து வரின் பரிந்துரையின் பேரில் கால்சியம் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பகட்ட மூட்டுத் தேய்மானத்தை மட்டும் உணவு, பழக்க வழக்கத்தால் சரிப்படுத்த முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஆரோக்கியமான வாழ்வை குடும்பத்தாருக்கு அளிக்கும் வயதான பெண்கள், தங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டால் இது போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வைத் தொடரலாம்” என்று அக்கறை யுடன் சொல்லி முடித்தார் டாக்டர் ஷ்யாம் சுந்தர்.

Related posts

ஆண் மைக் குறைபாட்டை ஏற்படுத்தும் மருந்து, மாத்திரைகள் – ஷாக் ரிப்போர்ட்!!!!

nathan

வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… அம்மாவாகப் போகிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகள்!

nathan

கற்பையும், உயிரையும் பலி வாங்கும் நட்பு

nathan

டான்சிலுக்கு ஆபரேஷன் அவசியமா?

nathan

அன்பை அதிகரிக்கும் அன்பளிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’..!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஞாபக மறதி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

nathan