26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி,

 

09ef0575-9aaf-4d60-9ddb-4d2b81525678_S_secvpf.gif,

மஞ்சளை அரைத்துப்பூசினால் தான் அழகு கிடைக்கும் என்றில்லை. மஞ்சள் கலந்த நீராவி கூட அழகைக் கூட்டும், தெரியுமா?! மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றை அரைத்து அதன் சாறை எடுத்து, கொதி நீரோடு கலந்து ஆவி பிடியுங்கள்.

அடுத்து ஒரு கைப்பிடி அளவு துளசியைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். பிறகு 3 எலுமிச்சை இலை அல்லது அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து ஆவி பிடியுங்கள். இத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடித்ததும், கடைசியில் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேயுங்கள்.

(சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க ஐஸ் ஒத்தடம் அவசியம்) பின்னர், ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை பூசி முகத்தை அலசுங்கள். அப்புறம் பாருங்கள்… `நானே நானா… மாறினேனா..!’ என்று உங்கள் விழிகள் விரியும்.

அந்தளவுக்கு துடைத்து வைத்த குத்து விளக்காக உங்கள் முகம் ஜொலிக்கும். சீசனில் தான் பசும் மஞ்சள் கிடைக்கும். இதனை காய வைத்தால், அது கஸ்தூரி மஞ்சள், பசும் மஞ்சள் கிடைக்காத சீசனில், மாற்றாக கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம்.

Related posts

சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க அற்புத அழகு குறிப்புகள்…!!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

மசாலா சப்பாத்தி

nathan

முக அழகை பேண புது வித குறிப்பு!…

sangika

முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள்!

nathan

முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்!

nathan

நடிகர் ஆர்யாவின் மாமியாரை கழட்டி விட்ட மாமனார்..! சட்டப்படி விவாகரத்து…

nathan

என்னதான் பல் தேய்த்தாலும் பற்களில் மஞ்சள் கறையா? கவலையே வேண்டாம்…

sangika

இதோ எளிய நிவாரணம்! அதிக முகப்பருக்களைக் கொண்ட ஆண்களுக்கான சில ஷேவிங் டிப்ஸ்…!

nathan

வேனிட்டி பாக்ஸ்: பவுடர்

nathan