Papaya
ஆரோக்கிய உணவு

பப்பாளிக்காயின் மருத்துவ பயன்கள்

பப்பாளிப் பழத்தை பலரும் விரும்பி சாப்பிடுவோம், அதில் நிறைய சத்துக்கள் இருப்பதை போல பப்பாளிக் காயிலும் விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம் போன்றவை இருக்கின்றன.

மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிக நல்லது இந்த காய்.

ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

சிறப்பு பலன்கள்:

– சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

– பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

– பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

– பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

– நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

– பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

– பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

– பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

– பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

– பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

– பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

– பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

– பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
Papaya

Related posts

அடேங்கப்பா! பழைய சாதத்தில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா…?

nathan

30 வகை சிங்கப்பூர், மலேசியா ரெசிப்பி!

nathan

உணவில் தினமும் ஒரு கீரையை சேர்ப்பது நல்லதா?

nathan

பெண்களை கவர கூடிய கட்டுமஸ்தான உடலை ஆண்கள் பெறுவதற்கு இது உதவுவதாக கூறப்படுகிறது!…

sangika

பதநீரில் இத்தனை மருத்துவ நன்மைகள் உண்டா…..!!

nathan

உளுந்தங்களி பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

nathan

அடுப்பில்லை, எண்ணெயில்லை… ஆரோக்யத்துக்கு அடித்தளமிடும் இயற்கை சமையல் முறை!

nathan

ஆரோக்கியமாக உண்ணுவதற்கு சுவாரஸ்யமான சில புதிய விதிமுறைகள்!!!

nathan

சம்மர் ஸ்பெஷல் முலாம் – தர்பூசணி ஜூஸ்! ~ பெட்டகம்

nathan