23.7 C
Chennai
Monday, Dec 23, 2024
natural food 12045
ஆரோக்கிய உணவு

கற்றாழை, கோதுமைப்புல், திரிபலா..! பெருங்குடலை சுத்தம் செய்யும் இயற்கை உணவுகள்

சர்க்கரை நோயும் ரத்தஅழுத்தமும் கூட நோயல்ல. மலச்சிக்கல் பிரச்னை இருப்பதை நோய் என்பார்கள். கழிவுகளை வெளியேற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். கழிவுகள் வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கினால் அவை நோயை உருவாக்கும். சரியான உணவுமுறையைப் பின்பற்றாததும், வெந்தும் வேகாத உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதாலும், நார்ச்சத்துள்ள உணவுகளைப் புறக்கணிப்பதாலும் அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னைகளால் பெருங்குடலில் நச்சுகள் சேர்ந்துவிடுகிறது. இவை பெருங்குடல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்குத் தொடக்கமாக அமைகின்றன. எனவே பெருங்குடலில் சேரும் நச்சுகளை உடனடியாக வெளியேற்றுவது முக்கியமாகும். இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதன்மூலம் பெருங்குடலை சுத்தம் செய்துகொள்ள முடியும். அதற்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும் எனப் பார்ப்போம்..

ஆளிவிதை
ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. இவை பெருங்குடலின் உட்புறச் சுவர்களில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைகின்றன. பெருங்குடலில் ஏற்படும் கட்டி, வீக்கங்களைக் குறைப்பதோடு செரிமானத்துக்கும் இவை உதவுகின்றன.

கற்றாழை

கற்றாழைச் சாறு, பெருங்குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும். செரிமானத்தை எளிதாக்கும். இது, தோல் நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படும்.

கோதுமைப்புல் சாறு
உடலில் அதிக ஆக்ஸிஜன் சேர கோதுமைப்புல் உதவும். பெருங்குடலில் உள்ள நச்சுகளை மிக எளிதில் நீக்கும். அதனுடன், புற்றுநோய் செல்கள் உருவாவதையும் தடுக்கும்.

பழங்கள்
திராட்சை, அன்னாசிப் பழம், பப்பாளி, கிவி, ஆப்பிள், அவகேடோ ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இவை பெருங்குடல் கழிவுகளை எளிதில் வெளியேற்றும்.

பச்சைநிற உணவுகள்
கீரைகள், வெண்டைக்காய், அவரைக்காய், தண்ணீர் விட்டான் கொடி, முட்டைக்கோஸ், பட்டாணி போன்றவற்றில் குளோரோபில் (Chlorophyll ) அதிக அளவில் உள்ளது. இது பெருங்குடலில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதோடு, ஏற்கெனவே உள்ள பாக்டீரியாக்களையும் வெளியேற்றுகிறது.

தண்ணீர்
தொடர்ச்சியான நீர்ச்சத்துக் குறைபாடு (Dehydration), மலச்சிக்கல், உடலில் நச்சு சேர்தல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். 2-3 லிட்டர் தண்ணீரை தினமும் குடித்துவர கழிவுகள் எளிதில் வெளியேறும். பெருங்குடல் சுத்தமாகும். இதனுடன், ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது கடல்உப்பை சேர்த்துக்கொள்வது நல்லது.

முளைவிட்ட பயறுகள்
இவற்றில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. எனவே இது பெருங்குடலை சுத்திகரிக்க மிகச்சிறந்த உணவு.

பூண்டு
பூண்டு, பாக்டீரியா மற்றும் குடற்புழுவுக்கு எதிரான தன்மை கொண்டுள்ளது. இது பெருங்குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. செரிமானத்தை எளிதாக்குவதோடு செரிமானப் பாதையில் வீக்கம், கட்டி முதலியவை உருவாவதையும் இது தடுக்கிறது.

தானியங்கள்

முழு தானியங்கள்
முழு தானியங்களில் செய்யப்பட்ட பிரெட் (Bread), சாலட் போன்றவற்றில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இவற்றில் கலோரி, கொழுப்பு போன்றவை குறைவு. இவை எளிதில் செரிமானமாக உதவுவதோடு , பெருங்குடலையும் சுத்தமாக்கும்.

கிரீன் டீ
பெருங்குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதோடு உடல் எடையையும் குறைக்க வேண்டுமென்றால் அதற்கு கிரீன் டீதான் சரியான வழி. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி பெருங்குடலை சுத்தம் செய்ய உதவுகின்றன.

 

எலுமிச்சை சாறு
சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த எலுமிச்சை, ஆன்டிசெப்டிக் ஆகச் செயல்பட்டுப் பெருங்குடலில் நுண்ணுயிரிகள் உருவாவதைத் தடுக்கிறது. தினமும் காலையில் சிறிதளவு நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்கப் பெருங்குடல் சுத்தமாகும்.

மீன்
ஆளிவிதையைப் போல மீனிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை பெருங்குடலை சுத்தப்படுத்துகின்றன. செரிமானத்துக்கும் நல்லது.

இஞ்சி

இஞ்சிச் சாறு
பெருங்குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, அதைச் சிறப்பாகச் செயல்பட வைக்க இஞ்சிச்சாறு உதவும். உடலில் தங்கியிருக்கும் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்ற உதவும் இஞ்சி, நச்சுப்பொருட்களையும் வெளியேற்றும். ஒரு டீஸ்பூன் இஞ்சிச்சாற்றை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை குடித்துவர பெருங்குடல் பிரச்னைகள் தீரும். இஞ்சியை டீ போட்டும் குடிக்கலாம். கர்ப்பிணிகள், தாய்ப்பாலூட்டுபவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

தயிர்
தயிரில் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் ஆகியவற்றைத் தடுக்கும்.

திரிபலா
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் கலந்த கலவையே திரிபலா எனப்படுகிறது. இதில் வைட்டமின் சி, பயோஃபிளேவனாய்டு (Bioflavonoid) போன்ற சத்துகளும் போஸ்போலிபிட்ஸ் (Phospholipids) எனப்படும் நன்மை செய்யும் கொழுப்பும் உள்ளன. இவை பெருங்குடலை சுத்தம் செய்ய உதவுகின்றன.

திரிபலா பொடி

இந்த உணவுப்பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பெருங்குடல் சுத்தமாகும். பெருங்குடல் சுத்தமாவதால் மலச்சிக்கல் குறையும். எளிதில் செரிமானமாகும். கவனக்குறைவு ஏற்படாது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும். நல்ல தூக்கம் கிடைக்கும். பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். வைட்டமின்கள் உடலால் எளிதில் உறிஞ்சப்படும். ஒட்டுமொத்தத்தில் பெருங்குடல் சுத்தத்தின் மூலம் முழு உடலும் நன்றாக இயங்கும் என்பதால் இந்த உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது.natural food 12045

Related posts

சூப்பர் டிப்ஸ் கொண்டைக்கடலை புளிக்குழம்பு

nathan

கொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம்

nathan

தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ?

nathan

சூப்பர் டிப்ஸ்! மார்பக புற்றுநோய் சரியாக., நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த ஒரு பழம் போதும்.!!

nathan

பாதாமை ப்ராஸஸ் செய்வது எப்படி???? ஆரோக்கியம் & நல்வாழ்வு!

nathan

உங்க இதயம் மற்றும் கல்லிரல் ஆரோக்கியமாக இருக்கவும் எடையை குறைக்கவும்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ருசியான கறிவேப்பிலை மிளகு குழம்பு செய்ய…!

nathan

மட்டன் தோரன்

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! இந்த உணவுகளை தூக்கி குப்பையில் வீசுங்கள்!

nathan