28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
201704071435153774 2015. L styvpf 1
ஆரோக்கிய உணவு

அசைவ பிரியர்களுக்கு பகீர் செய்தி

மாறிவரும் வாழ்க்கை சூழலில், அசைவ உணவை கொஞ்சம் ஒதுக்கி வைப்பதே நல்லது. அசைவ உணவு சாப்பிடுவதால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்று பார்க்கலாம்.

அசைவ பிரியர்களுக்கு பகீர் செய்தி
அசைவ பிரியர்களுக்கு, தினமும் ஏதாவது ஓர் அசைவ வகை உணவு இல்லாமல் போனால், ஒரு வாய் உணவுகூட உள்ளே இறங்காது. ஆனால், மாறிவரும் வாழ்க்கை சூழலில், அசைவ உணவை கொஞ்சம் ஒதுக்கி வைப்பதே நல்லது என்ற கருத்து பரவலாக உள்ளது. அசைவ உணவு சாப்பிடுவதால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்று பார்க்கலாம்.

”அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் அதிகமாக சாப்பிடும்போது, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், சீரற்ற இதய துடிப்பு, அதிக உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதயத்துக்கு செல்லும் குழாயில் கொழுப்பு படியும். அதிக ரத்த அழுத்தம் ஏற்படும். பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும். பெண்குழந்தைகள் அதிக அளவில் எடுத்துக் கொண்டால், சிறு வயதிலேயே பருவம் எய்தும் நிலை உண்டாகும்.

உணவில் காய்கறிகளை அதிகம் சேர்க்கும்போது, 4 அல்லது 5 மணி நேரத்துக்குள் செரித்துவிடும். ஆனால், அசைவு உணவு செரிமானம் அடைய சுமார் 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் வரை ஆகும். எனவே, அசைவ உணவுகளை இரவு வேளையில் சாப்பிடக் கூடாது. செரிமானப் பிரச்சனையால் பித்தப்பையில் கல் உருவாகும்.

சில ஆண்கள் மது அருந்திவிட்டு, அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். இதனால், உடலில் கொழுப்பு சேர்ந்து, உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். மேலும் பக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு. குடலிலும் அதிக கொழுப்பு தங்கி, குடலின் இயக்கம் பாதிக்கப்படும். விளைவு, அதிக கோபம், எரிச்சல், நிதானமின்மை என அன்றாட செயல்களில் பாதிப்புகள் ஏற்படலாம்.

அசைவத்தை நிறுத்தினால்…

* இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது, முதலில் உடலின் எடை 3 அல்லது 4 கிலோ வரை குறைய வாய்ப்புள்ளது.

* சைவம் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சைவ உணவாளர்களுக்கு இதயநோய் பாதிப்பு 24 சதவீதம் வரை குறைவாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.

* உடல் தசைகள் வலுவடைய புரதச்சத்து மிகவும் அவசியம். இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது புரதச்சத்து குறைய வாய்ப்புள்ளது. புரதச்சத்து நிறைந்த சைவ உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

* இறைச்சி சாப்பிடுவதால் உடல் சூடு அதிகமாக இருக்கும். இறைச்சியைத் தவிர்ப்பதால் உடல் சூடு குறையும்.

* ஆட்டு இறைச்சியில் கொழுப்பு அதிகம். எனவே அதைத் தவிர்க்கும்போது, உடலில் சேரும் கொழுப்பின் அளவு குறையும்.

* அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது சைவ உணவு எளிதில் செரிமானமாகும். ஏற்கனவே செரிமானப் பிரச்சனைகள் இருந்தாலும் சரியாகும்.

* கடின உழைப்பாளிகளுக்கு சைவம், அசைவம் என எந்த வகை உணவானாலும், உடலில் கலோரிகள் தங்காமல் எரிக்கப்பட்டுவிடும். அசைவம் சாப்பிட்டாலும் எந்த பிரச்சனையும் இருக்காது.

* உடலை அதிகம் அலட்டிக்கொள்ளாமல் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், அன்றாடம் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், அசைவ உணவின் சத்துக்களை சைவ உணவின் மூலம் ஈடுசெய்ய முடியும்.
201704071435153774 2015. L styvpf

Related posts

pottukadalai benefits in tamil – பொட்டுக்கடலை நன்மைகள்

nathan

பீட்ரூட் ஜூஸ் குடித்தால் என்ன நன்மைகள்

nathan

தினசரி உணவுகளில் சேர்க்கப்படும் இந்த இரசாயனங்களால் உயிருக்கே ஆபத்தாம்…

nathan

வல்லாரை ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, மூளையையும் சுறுசுறுப்படையச் செய்யும்.

nathan

சூப்பர் டிப்ஸ்! வல்லாரைக் கீரை சட்னி

nathan

முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது?

nathan

காளான் மசாலா

nathan

ப்ராக்கோலி ரோஸ்ட்

nathan

பிரட்டில் எது மிகவும் ஆரோக்கியமானது? தெரிஞ்சிக்கங்க…

nathan