23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201704061014197134 problems for children in social networks SECVPF 1
மருத்துவ குறிப்பு

குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களில் ஏற்படும் பிரச்சனைகள்

குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் ஆபத்தில் சிக்கும்போது உடனடியாக அதனை தெரிவிக்கும் வண்ணம் மனம்விட்டு பெற்றோரிடம் பேசலாம் என்ற நம்பிக்கையை விதைப்பது அவசியம்.

குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களில் ஏற்படும் பிரச்சனைகள்
குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் ஆபத்தில் சிக்கும்போது உடனடியாக பெற்றோரிடம் அதனை தெரிவிக்கும் வண்ணம் குழந்தைகளின் நம்பிக்கைக்குரியவர்களாக எது தொடர்பானதையும் பிள்ளைகள் மனம்விட்டு பெற்றோரிடம் பேசலாம் என்ற நம்பிக்கையை விதைப்பது அவசியம். உங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களிலோ அல்லது இணையதளத்திலோ தவறாக பயன்படுத்தினால் உடனடியாக அந்த தளத்தை ஸ்கிரின்ஷாட் எடுங்கள். குறைந்தது அந்த இணையதளத்தை புகைப்படமாவது எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புகார் கொடுக்க உதவும்.

இரவு 9 மணிக்கு மேல் வீட்டில் வைஃப்பை பயன்படுத்துவதை பெரியோர்கள் தவிர்த்துவிட்டு குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பேசுவதை வழக்கமாக கொள்வது நல்லது. தாங்கள் இணையத்தில் பார்த்த, படித்த விஷயங்களை அவ்வப்போது பரிமாறிக்கொள்வதும் சிறப்பு.

குழந்தைகள் கவனத்திற்கு…

* இமெயில், பேஸ்புக், ட்விட்டர் என்று உங்கள் இணையதளத்தின் அனைத்து கணக்குகளுக்கும் வைக்கும் பாஸ்வேர்டை யாருக்கும் பகிராதீர்கள்.

* பாஸ்வேர்டில் எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் (@) போன்றவற்றை சேர்ப்பது நலம். பாஸ்வேர்டுகள் திருடப்படாமல் பாதுகாக்க இது உதவும்.

* தனக்கும் தன் குடும்பத்தினர் மட்டும் அறியக்கூடிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

201704061014197134 problems for children in social networks SECVPF

* இணையத்தில் அவ்வப்போது உங்களது சொந்த தகவல்களை கேட்கும் தளங்களுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது.

* உங்கள் சமூக வலைத்தளங்களில் allow, ok போன்று பட்டன்களை கிளிக் செய்வதற்கு முன்னால் எதற்காக உங்களிடம் அனுமதி கோருகிறார்கள் என்பதை அறிந்த பிறகே கிளிக் செய்யுங்கள்.

* உங்கள் பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தவர்களின் பெயர்களை பாஸ்வேர்டாக வைக்காதீர்கள். எளிதில் உங்களது பாஸ்வேர்டை எதிரிகள் கண்டுபிடித்து விடுவார்கள்.

* புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் போது கூடுதல் கவனம் தேவை.

* தாங்கள் செல்லும் இடங்களை உடனுக்குடன் பதிவிடுவதும் ஆபத்துதான். சொந்தக் கருத்துகளை பதிவிடும் போது அதிக கவனம் தேவை. உங்களுக்கு வந்த தகவலையும் அப்படியே பகிராமல் அதன் உண்மைத் தன்மை உணர்ந்து ஆராய்ந்து பிறகு பகிருங்கள்.

* இந்தியாவில் இணையம் பயன்படுத்தும் 35 கோடி பேரில் 94% பேர் மொபைல் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துகிறார்கள்.

* இதில் 2.8 கோடி பள்ளி செல்லும் குழந்தைகள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்கிறது இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் சங்கம்.

* கிராமப்புறங்களில் பெண்கள் 10% இன்டர்நெட் சேவையை பயன்படுத்து கிறார்கள். நகர்புற பெண்களில் மூன்றில் ஒரு பெண் இணைய சேவையை பயன் படுத்துகிறார்கள்.

பிப்ரவரி 7ம் தேதி உலகளவில் சர்வதேச இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இணைய பயன்பாட்டின்போது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த safetyinternetday2017# என்ற பெயரில் கனடா, அமெரிக்கா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இணையதளத்தில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 73% பேர் குழந்தைகள் இணையத்தை பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு தேவை என வாக்களித்துள்ளனர்.

74% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு இணைய பயன்பாடு அவசியம் என்று வாக்களித்துள்ளார்கள். 21% பெற்றோர்கள் இணைய மோசடிக்காரர்களால் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். பாலியல் தொல்லைகள் பெண் குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகம் இருப்பதாக 20% பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 19% ஆபாச காட்சிகள் அடங்கிய போர்னோ தளங்கள் குழந்தைகள் கவனத்தை சிதறடிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். அதனால் போர்னோ தளங்களை முடக்க அரசு தரப்பிலே முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்துள்ளனர்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதத்தில் கவனிக்க வேண்டியவை!!

nathan

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது தெரியுமா?

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால்… அலட்சியம் காட்ட வேண்டாம்..!

nathan

அக்குள் அரிப்பு பயங்கரமா இருக்கா? இயற்கை தீர்வுகள்!

nathan

மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவோம்

nathan

இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! கர்ப்பத்தால் ஏற்பட்ட ஸ்ட்ரெட்ச் மார்க்குளைப் போக்க சில டிப்ஸ்…

nathan

தொப்புள் கொடியைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்!!!தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அம்மாக்களின் இந்த பழக்கங்கள் குழந்தை ஸ்மார்ட்டாக பிறக்க உதவும்…

nathan