குழந்தைகளுக்கு காய்கறிகளுடன் முட்டை சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கேரட், முட்டை சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு சத்தான கேரட் முட்டை ஆம்லெட்
தேவையான பொருட்கள்:
முட்டை – 3
கேரட் – 1
மிளகு – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
செய்முறை :
* கேரட்டை துருவிக் கொள்ளவும்.
* மிளகை பொடித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் கேரட் துருவல், உப்பு, பாதி மிளகுதூள் போட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன், பாதி எண்ணெய் ஊற்றி அடித்து வைத்த முட்டைக் கலவையை பரவலாக ஊற்றி அதன் மேல் மீதி எண்ணெயை பரவலாக ஊற்றவும். அடுப்பை மிதமாக எரியவிடவும்.
* இருபுறமும் நன்கு வெந்தவுடன் மேலே மீதி மிளகுதூளை தூவி விடவும்..
* சூப்பரான சத்து நிறைந்த கேரட் முட்டை ஆம்லெட் ரெடி.
* விருப்பப்பட்டால் ரொட்டித்துண்டுகளில் வெண்ணைய் தடவி, துண்டுகளாக்கிய ஆம்லெட்டை இடையில் வைத்து உண்ணலாம்.
* டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.