வாயுப் பிரச்சனைக்கு பிறகு ஓர் மனிதன் பொது இடங்களில் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாவது இந்த வியர்வை துர்நாற்ற பிரச்சனையின் காரணத்தினால் தான். பொதுவாக வெயிலில் அலைந்து, திரிந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வியர்க்க வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆனால், சிலருக்கு சாதாரண வேலைகள் செய்யும் போது கூட அளவிற்கு அதிகமாக வியர்வை வெளிப்படும். வியர்வை வெளிவருவது நல்லது தான், ஆனால் வியர்வையோடு சேர்ந்து அதிகமாக துர்நாற்றம் வெளிப்படுவது தான் இவர்களுக்கு ஏற்படும் சிக்கலே.
அனைவருக்கும் தான் வியக்கிறது, ஆனால் ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அதிகம் துர்நாற்றம் வீசுகிறது??? ஏனெனில், உண்மையில் வியர்வை நாற்றம் அற்றது. வியர்வை நமது உடலின் தேகத்தில் இருக்கும் பாக்டீரியாவோடு கலக்கும் போது தான் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது….
அதிகமான பதட்டம் பதட்டம் அல்லது மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் பயத்தினால் எந்த வேலைப்பாடும் இன்றி பெருமளவு வியர்வை வெளிப்பட வாய்ப்புகள் இருக்கிறது. திடீரென உங்கள் தேகத்தில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் கலக்கும் வியர்வையானது அதிக துர்நாற்றம் வீசுகிறது.
செயற்கை நூலிழை காட்டன், கம்பளி போன்ற இயற்கை நூலிழை இன்றி, ரேயான், பாலியஸ்டர் போன்ற செயற்கை நூலிழையால் தயாரிக்கப்பட்ட உடைகள் அணியும் போது அதிக வியர்வை சருமத்தில் இருக்கும் பாக்டீரியாவோடு கலந்து துர்நாற்றம் வீசலாம். இயற்கை நூலிழைகள் வியர்வை உறுஞ்சி ஆவியாக செய்துவிடுகிறது. ஆனால், செயற்கை நூலிழைகள் வியர்வையை உறிஞ்சுவது இல்லை. இதனால் தான் துர்நாற்றம் அதிகம் ஏற்படுகிறது.
வாசனை திரவியங்கள் துர்நாற்றத்தை போக்க நீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் தான் பெரும்பாலும் வியர்வை துர்நாற்றம் ஏற்பட காரணமாக இருக்கிறது. இந்த வாசனை திரவியங்கள் உங்கள் தேகத்தில் பாக்டீரியாக்கள் அதிகம் உருவாக காரணியாக இருக்கிறது. இதனால் வியர்வை அதிக பாக்டீரியாவோடு கலந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. நிபுணர்கள் கூட, வெறும் நீரை பயன்படுத்தி கழுவுவதே போதுமானது என்று தான் பரிந்துரைக்கின்றனர்.
மாத்திரை, மருந்துகள் உடல்நலக் குறைவின் காரணமாக நாம் உட்கொள்ளும் சில மருந்து, மாத்திரைகளின் காரணமாக கூட நமது உடலில் வியர்வை அதிகம் சுரக்கலாம் என்று கூறப்படுகிறது. உடல் எடை குறைப்பு மற்றும் அலர்ஜியை போக்க நாம் உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளின் காரணமாகவும் அதிகமாக வியர்வை வெளிப்படலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு ஊட்டச்சத்து குறைபாடும் நமது உடலில் அதிக வியர்வை வெளிப்பட ஓர் காரணியாக இருக்கிறது. முக்கிமாக மெக்னீசியம் சத்து குறைபாட்டினால் அதிக வியர்வை சுரக்கலாம். பச்சை காய்கறிகள், நட்ஸ் போன்ற உணவுகளில் மெக்னீசியம் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது
கார்போஹைட்ரேட் குறைந்த உணவு கார்போஹைட்ரேட் குறைந்த உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு உடலில் அதிக வியர்வை சுரக்கும் என்று கூறப்படுகிறது. புரதச்சத்து உணவுகள் அதிகமாக உட்கொண்டால் அதிகப்படியாக வெளிப்படும் வியர்வையை கட்டுப்படுத்த முடியும்.
அதிகமான இனிப்பு உணவுகள் சாக்லேட் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகம் உட்கொள்வதால் நமது உடலில் பாக்டீரியாக்கள் அதிகம் உருவாகின்றன. உண்மையில், இனிப்பு பாக்டீரியாக்களின் சொர்க்கம் என்று கூறலாம். எனவே, இதன் காரணமாக கூட வியர்வை துர்நாற்றம் அதிகமாக வீச வாய்ப்புகள் இருக்கின்றன.
சிறுநீர், மலம் அடக்குதல் அதிகமாக சிறுநீர் அல்லது மலம் அடக்குவதால், செரிமான இயக்கம் கழிவுகளை துளைகளின் வழியாக வெளியேற்ற துவங்கும் என ஓர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு சரும துளை வழியாக வியர்வையாக வெளிவரும் கழிவுகள் அதிக நாற்றம் வீசும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நேற்றைய இரவு உணவு நேற்று நீங்கள் உண்ட இரவு உணவும் அதிகமாக வீசும் வியர்வை துர்நாற்றத்திற்கு ஓர் காரணமாக திகழ்கிறது. இரவு உணவில் அதிக மசாலா உணவு அல்லது பூண்டு, வெங்காயம் சேர்த்து உண்பதால் காலை செரிமான பிரச்சனை ஏற்படும், இதனால் உடல் துர்நாற்றமும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.