25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1476872043 7899
இனிப்பு வகைகள்

சுலபமான முறையில் ஜாங்கிரி செய்ய இதோ இதை படியுங்கள்….

தேவையான பொருள்கள்:

உளுந்து – ஒரு கப்
சர்க்கரை – 3 கப்
ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
உணவு நிறமி (ஃபுட் கலர்) – ஒரு சிட்டிகை
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மாவை நன்றாக பந்து போல கெட்டியாகும் வரை அரைக்கவும். அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலித்தின் கவரில் ஒரு ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை வைத்து, மூட்டை போல பிடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும். எண்ணெய் அதிகச் சூடாக இருக்கக்கூடாது.

இருபக்கமும் வெந்ததும் அதாவது மொறுமொறுப்பாக வேகக்கூடாது. எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிட்டு எடுக்கவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறினால் போதும். சுவையான, ஜாங்கிரி தயார். இந்த தீபாவளிக்கு கண்டிப்பாக ஜாங்கிரி செய்து பாருங்கள்.1476872043 7899

Related posts

கடலை மாவு பர்பி

nathan

வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி

nathan

கோவா- கேரட் அல்வா

nathan

சேமியா கேசரி: நவராத்திரி ஸ்பெஷல்

nathan

சுவையான சாக்லெட் புடிங்

nathan

சுவையான பீட்ரூட் அல்வா

nathan

இளநீர் பாயாசம்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பால் போளி

nathan

குலோப் ஜாமூன் .

nathan