29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
nellikai
ஆரோக்கிய உணவு

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை!

இரும்பு சத்து அதிகம் கொண்ட நெல்லிக்காயை, ஏழைகளின் ஆப்பிள் என அழைப்பர். இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.
ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வை தரவல்லது நெல்லிக்கனி.

நெல்லிக்காயில் உடல் நன்மைகள் மட்டுமின்றி, அழகு நன்மைகளும் அதிகம் நிறைந்துள்ளது. அக உடலை மட்டுமல்ல, கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவோடு, பளபளவென அழகாக இருக்கும். உடலில் உள்ள, டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றிவிடுகிறது.
பொலிவிழந்த முடி போதிய கூந்தல் பராமரிப்பு இல்லாததாலும், அதிக மாசுபாடு காரணமாகவும், கூந்தலானது பொலிவிழந்துவிடுகிறது. எனவே இதனை சரிசெய்யவும், கூந்தலை வலுவாக்கவும், நெல்லிக்காயை பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். நெல்லிக்காய் ஒரு இயற்கையான ஹேர் கண்டிஷனர். இதை தலைக்கு போட்டுக் குளித்தால், தலைக்கு, கண்டிஷனர் போட்டது போன்று இருக்கும்.
தினமும் நெல்லிக்காய் எண்ணெய் கொண்டு, தலைக்கு 45 நிமிடம் மசாஜ் செய்து, பின் தலைக்கு குளித்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம். நெல்லிக்காய் பொடியை, சீகைக்காய் பொடி மற்றும் ஹென்னாவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு குளித்து வந்தால், கூந்தல் அடர்த்தியாகும். மேலும், நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்தினாலும், கூந்தல் அடர்த்தியாகும்.
பொடுகுத் தொல்லையைப் போக்குவதற்கு நெல்லிக்காய் அருமருந்து. இதை தொடர்ந்து பயன்படுத்தினால், தலை நன்கு சுத்தமாகவும் பொடுகின்றியும் இருக்கும். மன அழுத்தம், செரிமானப் பிரச்சனை மற்றும் ஆரோக்கியமற்ற டயட் காரணமாக, சிலருக்கு நரைமுடி, இளமையிலேயே வந்துவிடுகிறது. எனவே இதை தடுக்க, தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது நல்லது. நெல்லிக்காய் எண்ணெய் தடவி வந்தால், நரைமுடிக்கு முடிவு கட்டலாம். என்றும் இளமை பொலிவுடன் இருக்கலாம்.
தலையில் அதிகமான அரிப்பு ஏற்பட்டால், நெல்லிக்காய் பொடியுடன், தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின், ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் ஏற்படும் அரிப்புகள் நீங்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் கூந்தல் வறட்சி, நிறம் மாறுதல் போன்றவை ஏற்படுகிறது. நெல்லிக்காய் எண்ணெயை தினமும் தடவி கூந்தலை பராமரித்தால், இந்த பிரச்னைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இதர மருத்துவ குணங்கள்:
ஆப்பிள் போன்று அனைத்து நன்மைகளையும் கொண்டது நெல்லிக்காய். ஆனால், இதன் விலை மிகவும் குறைவு. சந்தைகளில் எளிதில் கிடைக்கவல்லது. தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால், நோய்கள் தூர விலகிவிடும். நெல்லிக்காய் சாப்பிடுவதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும் என்று தெரிய வந்துள்ளது.
அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவும். நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும். நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். மேலும் நெல்லிக்காய் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தும்.
அதிலும் நெல்லி பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.nellikai

Related posts

தெரிஞ்சிக்கங்க… நட்சத்திரப் பழமும், நன்மைகளும்…

nathan

பாஸ்தா சூப் செய்முறை….!

nathan

ருசியான தேன் மிட்டாய்!! வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா!!

nathan

ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம்

sangika

இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

nathan

Food Poison ஆயிடுச்சா? இதோ எளிய நிவாரணம்! இயற்கை வைத்தியம் இருக்கு!

nathan

நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.

nathan

சுவையான கொண்டைக்கடலை கேரட் சாலட் – செய்வது எப்படி?

nathan