02 1441191970 1easywaytoridofffromeyeirritation
ஆரோக்கியம் குறிப்புகள்

கண்ணெரிச்சலில் இருந்து தீர்வுக் காண ஸ்பெஷல் எண்ணெய் குளியல்!!!

இப்போதைய காலக்கட்டதில் கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் இல்லாத வாழ்க்கையைக் காண்பது அரிது. இந்த வாழ்வியல் முறை மாற்றத்தினால் கண்ணெரிச்சல், உடல் எடை அதிகரிப்பு, ஆண்மை குறைவு என பல பிரச்சனைகள் பரிசாய் கிடைத்திருக்கிறது. இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் குறைபாடாக கருதப்படுவது கண்ணெரிச்சல் தான்.

இதற்கான எளிய வீட்டு முறை வைத்தியம் ஒன்று இருக்கிறது. அது ஒரு ஸ்பெஷல் எண்ணெய், அதை தலைக்கு தேய்த்து குளித்தால் கண்களில் எரிச்சல் குறைந்து, குளிர்ச்சி அடையும். உடல் புத்துணர்ச்சியாகவும் உணர முடியும். இனி அந்த ஸ்பெஷல் எண்ணெய்யை எப்படி எளிதாக வீட்டிலேயே தயார் செய்வது, பயன்பெறுவது என்பதை பற்றி காணலாம்…

அறிகுறிகள் இந்த எளிய வைத்திய முறையை கண் எரிச்சல் மட்டுமின்றி கண் வலி, கண் சிவந்து காணப்படும் போது கூட பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள் இந்த ஸ்பெஷல் எண்ணெயை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடியும். நல்லெண்ணெய், வெங்காய சாறு புளிய இலைச்சாறு போன்றவை தான் தேவையான பொருட்கள்.

செய்முறை வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் கொள்ளவும்.

செயல்முறை நன்கு கலந்து வைத்துள்ள அந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விடவும்

தலைக்கு குளியல்
எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு, தலைக்கு குளித்து வாருங்கள். பிறகு உங்கள் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.

02 1441191970 1easywaytoridofffromeyeirritation

Related posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் உலர் திராட்சை !

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகள் ஏன் விளையாட வேண்டும்?

nathan

அத்திப்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள்

nathan

சுவையான கத்திரிக்காய் தக்காளி கொஸ்து

nathan

தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சிறிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு

nathan

வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல, அழுதாலும் கூட, நோய் விட்டு போகும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன….?

nathan

ஹேர் மாஸ்க் உங்க அனைத்து முடி பிரச்சனைகளை சரிசெய்யுமாம்!இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

நகங்களில் இந்த மாற்றங்கள் இருப்பின் மரணத்தின் விழிம்பில் இருக்கின்றார் என முடிவு எடுக்கலாம்!

nathan