24 C
Chennai
Wednesday, Feb 19, 2025
அறுசுவைஇனிப்பு வகைகள்

பாதாம் அல்வா செய்முறை

tt2தேவை
பாதாம் பருப்பு    -1டம்ளர்
சர்க்கரை        -11/2டம்ளர்
நெய்            -11/2டம்ளர்
முந்திரிப் பருப்பு    -1டே.ஸ்பூன்
கேசரிப் பவுடர்    -2சிட்டிகை
பால்            -1/4டம்ளர்
தண்ணீர்        -1/4டம்ளர்
ஏலப்பொடி        -1/4ஸ்பூன்

செய்முறை
பாதாம் பருப்பை, ஒரு மணி நேரம் ஊறவைத்து, தோலை உரித்து எடுத்துவிடவும்.
ஊறிய பருப்பை, மிக்ஸியில் நன்றாக மைய அரைக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீருக்குப் பதிலாக பாலை சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதை மீதம் பால் இருந்தால் சேர்த்தோ அல்லது தண்ணீரை விட்டோ கூழ்போல் கரைத்துக் கொள்ளவும்.
சிறிதளவு நெய்யை வைத்து, முந்திரிப் பருப்பை ஒடித்து, வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தண்ணீரில் சர்க்கரையைப் போட்டு நல்ல கம்பிப் பாகு நிலை வரும் வரைக்கும் கொதிக்க விடவும். கம்பிப் பதம் வந்தவுடன் அடுப்பைச் சிறியதாக வைத்து, அரைத்த கூழைக் கொட்டிக் கிளறிக் கொண்டேயிருக்கவும்.
அடுப்பில் கிளறிக் கொண்டிருக்கும் பொழுதே, மீதமுள்ள நெய்யை, கொஞ்சம் கொஞ்சமாக உருக்கி ஊற்றவும். கேசரிப் பவுடரைச் சேர்க்கவும்.
சிறிது நேரத்தில் உள்வாங்கிய நெய்யை அல்வா வெளியேற்றும் அல்லது கக்கும்.
அப்பொழுது ஏலப்பொடியையும் தூவிக் கிளறி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டவும்.

Related posts

மாம்பழ குச்சி ஐஸ் செய்து சுவையுங்கள்!

nathan

முயன்று பாருங்கள் வெஜ் பீட்சா

nathan

கொண்டைக்கடலை மசாலா…

nathan

தித்திப்பான ரவை – தேங்காய் உருண்டை

nathan

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்….

sangika

nathan

சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி !….

sangika

ரசகுல்லா செய்முறை!

nathan

வீட்டிலேயே செய்யக்கூடிய‌ சில்லி முட்டை.

nathan