22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
29 1440830428 1meditation
ஆரோக்கியம் குறிப்புகள்

வெளிநாட்டு மக்கள் விரும்பி மேற்கொண்டு வரும் சில இந்திய ஆரோக்கிய குறிப்புகள்!!!

இந்தியா அதன் கலாச்சாரம், பழக்கவழக்கம், பண்பாடு போன்றவை நிறைந்த ஓர் நாடு. அதுமட்டுமின்றி, இந்திய நாட்டில் பல்வேறு இயற்கை வைத்தியங்களான யோகா, ஹோமியோபதி போன்றவை உள்ளது. மேலும் இந்திய நாட்டின் இயற்கை மருத்துவ முறைகளானது பல்வேறு நோய்களை நீக்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து நிரூபிக்கப்பட்டதும், பல்வேறு மேற்கத்திய மக்களும் இந்திய இயற்கை வைத்தியங்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.

ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இந்திய ஆரோக்கிய குறிப்புகளைத் தான் பின்பற்றுகின்றனர். உதாரணமாக, கிம் கர்தாஷியன், ஜெனீபர் அனிஸ்டன் போன்றோர் யோகாவை செய்து வருகின்றனர்.

இங்கு மேற்கத்திய மக்கள் விரும்பி மேற்கொண்டு வரும் சில இந்திய ஆரோக்கிய குறிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று சற்று படித்துப் பாருங்கள்.

தியானம் கண்களை மூடி ஓம் என்னும் மந்திரைத்தை உச்சரித்தவாறு, மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விடும் தியானமானது மேற்கத்திய மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

நெய் நெய் ஓர் ஆரோக்கியமான உணவுப் பொருள். இதனை அன்றாடம் உணவில் சிறிது சேர்த்து வந்தால், உடலின் ஆரோக்கியம் மேம்படும். சொல்லப்போனால் வெஜிடேபிள் எண்ணெயை விட சிறந்தது நெய். இந்த நெய்யை கூட மேற்கத்திய மக்கள் தங்களின் உணவில் சேர்த்து வருகிறார்கள்.

இஞ்சி டீ முன்பெல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு மாத்திரைகளை எடுத்து வந்த மேற்கத்திய மக்கள், தற்போது சூடாக ஒரு கப் இஞ்சி டீயை குடித்து வருகிறார்கள். இஞ்சி டீயானது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, தொற்றுக்களை சீக்கிரம் அழித்துவிடும் என்பது தெரிந்துவிட்டது.

தேங்காய் எண்ணெய் கேரளாவில் தேங்காய் எண்ணெய் உபயோகம் அதிகம் இருக்கும். மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் தங்களின் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்ப்பதால் தான் அவர்கள் சிக்கென்று உள்ளார்கள். எனவே இதை அறிந்து கொண்ட மேற்கத்திய மக்கள் தங்களின் உணவிலும் தேங்காய் எண்ணெயை சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மஞ்சள் மஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையினால், இது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய மஞ்சளையும் மேற்கத்திய மக்கள் தங்களின் உணவில் சேர்த்து வருகிறார்கள்.

யோகா இந்தியாவில் தோன்றிய மிகவும் அற்புதமான ஓர் கலை தான் யோகா. இந்த யோகாவைக் கொண்டு எத்தகைய உடல்நல பிரச்சனைகளையும் போக்கிவிடலாம். இந்த யோகாவைக் குறித்து மேற்கொண்ட ஆய்வில், யோகாவின் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது என்று தெரிய வந்துள்ளது. எனவே மேற்கத்திய மக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகாவை அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர்.
29 1440830428 1meditation

Related posts

இந்த 5 ராசிக்காரங்க தன்னம்பிக்கை இல்லாதவங்களா இருப்பாங்களாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

30 வயதை தாண்டிய திருமணமாகாத ஆண்களைப் பற்றி நினைக்கும் 10 விஷயங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா வாக்கிங்கை விட அதிக ஆரோக்கிய நன்மைகள் தரும் ஜாக்கிங்!!!

nathan

பேன் தொல்லையால் அவதியா? : இதோ சூப்பர் ஐடியா…!

nathan

ரத்தத்தை சுத்தமாக வைப்பது எப்படி?

nathan

“எலுமிச்சை சாறுடன் தேன் குடிப்பது நல்லதா’

nathan

பலரும் அறிந்திராத உடல் ஆரோக்கியம் குறித்த சில உண்மைகள்!!!

nathan

ஆய்வு கூறும் சிறந்த வழி,, அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி?

nathan

காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யலாமா?

nathan