26.7 C
Chennai
Saturday, Mar 14, 2026
javvarisivadai 22 1471869998
சிற்றுண்டி வகைகள்

ஜவ்வரிசி வடை: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

ஜவ்வரிசி வடை செய்யுங்கள். இது செய்வது மிகவும் சிம்பிள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த ஜவ்வரிசி வடையை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி – 3/4 கப் உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து, துண்டுகளாக்கப்பட்டது) வறுத்த வேர்க்கடலை – 1/4 கப் பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது) இஞ்சி – 1 டீஸ்பூன் (துருவியது) கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் (விருப்பமிருந்தால்)

செய்முறை: முதலில் ஒரு பௌலில் ஜவ்வரிசியை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி, 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த ஜவ்வரிசியைப் போட்டு, அத்துடன் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். ஒருவேளை கலவையில் நீர் அதிகம் இருந்தால், அத்துடன் அரிசி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ளதை சிறு உருண்டைகளாக எடுத்து வடைப் போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

javvarisivadai 22 1471869998

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் வாழைப்பழ போண்டா

nathan

மெக்ஸிகன் டா கோஸ் (Mexican Taccos)

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் மிளகு போண்டா

nathan

மீன் கட்லெட்

nathan

கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்வது எப்படி

nathan

இறாலில் செய்திடலாம் பஜ்ஜி…!!

nathan

சத்துக்கள் மிகுந்த வெஜிடபிள் போண்டா செய்ய வேண்டுமா?….

nathan

கல்மி வடா

nathan

பாதாம் சூரண்

nathan