என்னென்ன தேவை?
ரவை ஒரு கப்
மைதா கால் கப்
வெல்லம் ஒரு கப்
ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ரவையை வெறும் வாணலியில் வறுத்தெடுத்து, பொடித்துக்கொள்ளுங்கள். இத்துடன் மைதா மாவைக் கலந்து, தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையுங்கள். பிசைந்த மாவைக் கால்மணி நேரம் ஊறவையுங்கள்.
வாணலியில் வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறுங்கள். கெட்டியான பூரணமாக ஆனதும் இறக்கிவையுங்கள்.
பிசைந்த மாவிலிருந்து சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல செய்து, உள்ளே பூரணம் வைத்து மூடிவிடுங்கள். இதைச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். இந்தக் கொழுக்கட்டை கெடாது நாள்பட இருக்கும்.