24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ld45907
கை பராமரிப்பு

கை, கால் சிகிச்சைகளும் பிரச்னைகளுக்கான தீர்வுகளும்

கை, கால்களை அழகாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவக்கூடிய அழகு சாதனங்களைப் பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். அதன்
தொடர்ச்சி யாக வீட்டிலும் பார்லரிலும் செய்யக்கூடிய சிகிச்சைகள் மற்றும் கை, கால் பிரச்னைகளுக்கான தீர்வு களைப் பற்றி விளக்கங்கள் தருகிறார் அழகுக் கலை நிபுணர் உஷா.

கை, கால்களின் அழகுப் பராமரிப்புக்கு அவசியம் தேவையானவை…

* அதிக வியர்வைக்கு…
சிலருக்கு உடலில் வியர்ப்பது போலவே பாதங்களிலும்கூட வியர்க்கும். அது தர்மசங்கடமான உணர்வைத் தருவதுடன், சில நேரங்களில் தேவையற்ற வாடையையும் கிளப்பும். இப்பிரச்னை உள்ளவர்கள் பாதங்களுக்கான பிரத்யேக டியோடரன்ட் அல்லது ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் உபயோகிக்கலாம். இவற்றில் டியோடரன்ட் என்பவை ஆன்ட்டிபாக்டீரியல் செயல்பாட்டின் காரணமாக வியர்வை நாற்றத்தை நீக்குபவை. ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் என்பவை வியர்வை துவாரங்களை மூடி, அதன் மூலம் வியர்வையின் அளவைக் கட்டுப்படுத்துபவை.

அதிக அளவில் வியர்த்து, பாதங்கள் வழுக்கும் அளவுக்கு இருந்தால் ஆன்ட்டி பெர்ஸ்பிரண்ட் உபயோகிக்கலாம். இதை உபயோகித்ததும் உங்கள் பாதங்கள் வறண்ட நிலைக்கு மாறும். காரணம், அதிலுள்ள கெமிக்கல்கள். குறிப்பாக இதில் கலக்கப்படுகிற அமோனியம் குளோரைடு சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம். எனவே, அப்படி அலர்ஜி ஏதும் இருப்பது தெரிந்தால் சரும மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

* கால்களுக்கும் சன் ஸ்கிரீன் தேவை…
முகத்துக்கும் கைகளுக்கும் சன் ஸ்கிரீன் உபயோகிப்பது போல பாதங்களுக்கும்கூட அது அவசியம். கை, கால்களுக்கான கிரீம்களில் இப்போது சன் ஸ்கிரீன் கலந்தே வருகிறது. அவற்றைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த கிரீம்களில் கற்றாழை, வைட்டமின் இ, பிளாக் டீ, பால் போன்றவற்றின் கலவை இருக்குமாறு பார்த்து வாங்கவும்.

இன்னும் கொஞ்சம் ஆலோசனைகள்…

* கை மற்றும் கால்களின் சருமப் பகுதி வறண்டு போவதால்தான் வெடிப்பு, சுருக்கங்கள் போன்ற பல பிரச்னைகளும் வருகின்றன. அதை சரியாக்க மாயிச்சரைசர் அவசியம். எல்லோராலும் கால்களுக்கு மாயிச்சரைசர் வாங்குவது சரியாக வராது என்பதால், வீட்டிலேயே வறட்சியை நீக்கும் சிகிச்சைகளை எளிதாக செய்து கொள்ளலாம். கால்களுக்கு மாயிச்சரைசர் உபயோகிக்கிற போது விரல்களுக்கு இடையில் தடவ வேண்டாம். அது தொற்று ஏற்பட வழி வகுக்கலாம். குதிகால்கள் மற்றும் கால்களின் மேல் பகுதியில் மட்டும் உபயோகிக்கவும். கால்களைக் கழுவ வெந்நீர் உபயோகிக்க வேண்டாம். அது இருக்கும் கொஞ்ச நஞ்ச ஈரப்பதம் மற்றும் எண்ணெய் பசையையும் நீக்கி வறட்சியை மேலும் அதிகப்படுத்தும்.

* தினமும் இரவில் உங்கள் பாதங்களை பராமரிக்கவென பத்து நிமிடங்களை ஒதுக்குங்கள். கால்களுக்கு ஃபுட் வாஷ் அல்லது மிதமான சோப் உபயோகித்து குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, மென்மையாகத் துடைக்கவும். பிறகு ஃபுட் கிரீம் தடவவும். அவற்றில் டீ ட்ரீ ஆயில் மற்றும் பெப்பர்மின்ட் ஆயில் கலந்ததாக இருப்பது சிறப்பு. கால்களுக்கு மசாஜ் செய்து விட்டு, மெலிதான காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவது இரவு முழுக்க கால்களின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும்.

பார்லரில் என்ன சிகிச்சை?

கை, கால்களின் அழகைத் தக்க வைக்க பார்லர்களில் மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இப்போது இவற்றி லேயே ஸ்பா மெனிக்யூர், ஸ்பா பெடிக்யூர் வந்திருக்கின்றன. தவிர, ஒவ்வொருவருக்கும் கை, கால்களில் ஏற்படுகிற பிரத்யேக பிரச்னைகளுக்கேற்ற சிறப்பு மசாஜ் மற்றும் பாலிஷ் சிகிச்சைகளும் வந்திருக்கின்றன. வாரம் ஒரு முறை வீட்டிலேயே செய்யுங்கள்

* ஃபுட் ஸ்க்ரேப்பர் கொண்டு கால்களின் அடியில் வறண்ட பகுதி களைத் தேயுங்கள். இறந்த செல்கள் உதிர்வதைப் பார்க்கலாம்.
* அகலமான பக்கெட்டில் வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு, கால் கப் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து, கால்களை 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
* கால்களின் ஈரம் துடைத்து பியூமிஸ் ஸ்டோனால் மீண்டும் பாதங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தவும்.
* காஸ்ட்லியான ஃபுட் கிரீம் தான் உபயோகிக்க வேண்டும் என்றில்லை. கடைகளில் ஷியா பட்டர் எனக் கிடைக்கும். அதை வாங்கி மசாஜ் செய்யலாம். அதிலுள்ள வைட்டமின் ஏ, இ மற்றும் கொழுப்பு பாத சருமத்தை மென்மையாகவும் வறட்சி இன்றியும் வைக்கும். ஷியா பட்டருடன், பாதி அளவு தேங்காய் எண்ணெய் கலந்தும் இதே போல உபயோகிக்கலாம்.

ஃபுட் ஸ்க்ரப்

எப்சம் உப்பு (அப்படியே கடைகளில் கிடைக்கும்) 1 கப்,
லேவண்டர் ஆயில் 2 சொட்டு, குளிர்ந்த தண்ணீர் அரை கப். எப்சம் உப்பும், லேவண்டர் ஆயிலும் கலந்து, அதில் தண்ணீரை மிக மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கலக்கவும். அது பேஸ்ட் பதத்துக்கு வர வேண்டும். பாதங்களை கிரீம் கொண்டு மசாஜ் செய்த பிறகு இந்த ஸ்க்ரப் கொண்டு மிதமாகத் தேய்த்துக்
கழுவினால் இறந்த செல்கள் அகன்று பாதங்கள் பளிச்சிடும்.

கால்கள்

* களைப்பான பாதங்கள் கால்களுக்கும் களைப்பு ஏற்படும் என்றால் நம்ப முடிகிறதா?
மாதவிலக்கு நாட்களில் பெண்களுக்கும், கர்ப்பமாக இருக்கிற பெண்களுக்கும் கால்களில் களைப்பு உண்டாவது சகஜம். கால்களில் வீக்கமும் இருக்கும். இருதயக் கோளாறு இருப்பவர்களுக்கும் கால்களில் களைப்பும், வீக்கமும் உண்டாகும். இருதயக் கோளாறு இருப்பவர்கள் அதற்கு மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். மற்றவர்கள் முல்தானி மிட்டியுடன் 1 சிட்டிகை கற்பூரம் கலந்து கால்களில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் களைப்பு காணாமல் போவதை உணரலாம்.

* நரம்பு சுருட்டிக் கொள்ளுதல்
நீண்ட நேரம் நிற்கிற வேலையில்இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வரும். டாக்டர்கள், ரிசப்ஷனிஸ்ட்டுகள் போன்றோர் இப்பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தினசரி 2 மைல் தூரம் நடப்பது இப்பிரச்னைக்கு நல்ல தீர்வு தரும்.

* கறுப்பான முட்டிகள்
கால்களின் முட்டிப் பகுதி மட்டும் சிலருக்குக் கறுத்துக் காணப்படும். ஸ்பான்ஜில் சோப் அல்லது ஷாம்பூ கரைசலைத் தொட்டு கறுத்த இடங்
களில் தேய்த்து வந்தால் நாளடைவில் கறுமை நீங்கும்.

* சேற்றுப்புண்
நீண்ட நேரம் ஷூ, சாக்ஸ் அணிந்து கொண்டே இருப்பவர்களுக்கு வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாகக் கால்களில் உண்டாகும் ஒருவித வைரஸ் தொற்று இது. அதிக நேரம் தண்ணீரில் வேலை செய்கிறவர்களுக்கு சீக்கிரம் வரும்.

* கால் ஆணி
கால்களில் இறந்த செல்கள் அதிக மாவதன் விளைவே கால் ஆணி. முறையாக கால்களை வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரில் ஊற வைத்து, பியூமிஸ் கல்லால் தேய்த்து வர, கால் ஆணி லூஸாகி வெளியேறும். மறுபடி வராமலும் இருக்கும்.

* காலஸஸ்
கால்களின் அடிப்பகுதியில் இறந்த செல்கள் அதிகமாகி, அழுத்தமாவதன் விளைவால் உண்டாகும் பிரச்னையே இது. ரொம்பவும் அழுத்தமான, தரமற்ற காலணிகளை உபயோகிப்பதாலும் வரும். இறந்த செல்களை அகற்றி, முறையான பெடிக்யூர் செய்வது பலன் தரும்.

* அடிபட்ட தழும்பு
கால்கள் தெரிகிற மாதிரி உடைஅணிபவர்களுக்கு அடிபட்டதால் உண்டான தழும்பு தர்மசங்கடமாக இருக்கும். இவர்கள் ‘கேமஃபிளாஜ்’ கிரீம்களை உபயோகிக்கலாம். தழும்பு தெரியாமல் மறைக்கும் இது.

* கால்களுக்கும் பயிற்சி வேண்டும்
பாய் அல்லது தரைவிரிப்பில் கால்களை நீட்டியபடி உட்காரவும், பாதங்களை முன்பக்கமாக இழுத்து, முட்டிப் பகுதியை டைட்டாக்கவும். கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கச் செய்கிற பயிற்சி இது. ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, கால்கள் தரையில் படாமல், சைக்கிள் பெடலிங் செய்வது போலக் கால்களை அசைக்கவும்.

* பாரபின் சிகிச்சை
கால்களை அழகுப்படுத்துவதிலும், ஆரோக்கியமாக வைப்பதிலும் பாரபின் சிகிச்சை இப்போது ரொம்பவும் பிரபலம். மிதமான சூட்டில் உள்ள பாரபின் வாக்ஸில் ஒரு காஸ் துணியை முக்கி, அப்படியே கால்களின் மேல் போடவும். சிறிது நேரம் கழித்து எடுக்கவும். கால்களின் மேல் காஸ் துணியைப் போட்டு விட்டு, அதன் மேல் வாக்ஸை பெயின்ட் மாதிரி தடவவும் செய்யலாம்.

இந்த சிகிச்சை கால் தசைகளை இறுகச் செய்து, களைப்பை நீக்கி, தடித்த சருமத்தை மிருதுவாக்கி, கால்களை ஆரோக்கியமாக, அழகாக வைக்கும். இவை தவிர கால் வலியைப் போக்க வைப்ரேட்டரி மசாஜர் மூலம் அளிக்கப்படுகிற சிகிச்சையும், கால் குடைச்சலுக்கு இன்ஃப்ரா ரெட் லாம்ப் கொண்டு தரப்படுகிற சிகிச்சையும் கூட இப்போது லேட்டஸ்ட்.

வீட்டிலேயே செய்யலாம் மாயிச்சரைசர்

பெட்ரோலியம் ஜெல்லி 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு 3 துளி, வெதுவெதுப்பான தண்ணீர் சிறிது. பெட்ரோலியம் ஜெல்லி உடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குழைக்கவும். முதலில் கால்களை பத்து நிமிடங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்துத் துடைக்கவும். பெட்ரோலியம் ஜெல்லிக் கலவையை கால்களில் தடவி மென்மையாக மசாஜ் செய்து விட்டு, பிறகு சாக்ஸ் அணிந்து கொண்டு படுக்கவும். மறுநாள் காலையில் பாதங்கள் பட்டு போல இருக்கும். தொடர்ந்து இதைச் செய்து வர, பாத வெடிப்புகளும் வறட்சியும் நீங்கும்.ld45907

Related posts

அக்குளில் உள்ள நீங்கா கருமையைப் போக்க நிபுணர்கள் கூறும் சில டிப்ஸ்…

nathan

கருப்பா இருக்கும் முழங்கையை வெள்ளையாக்க ,beauty tips tamil,beauty tips skin tamil

nathan

மிகவும் அழகான பகுதி கைகள் பராமரிப்பு…..

sangika

உள்ள‍ங்கைகள் அழகாக, மிருதுவாக அருமையான எளிய குறிப்பு!

sangika

பட்டுபோன்ற கைகளுக்கு!

nathan

உங்களுக்கு பட்டுப்போன்ற கைகள் வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்!

nathan

உங்க கைகள் பட்டு போல இருக்கனுமா? இதோ சூப்பரா சின்ன சின்ன டிப்ஸ் !!

nathan

மென்மையான கைகள் வேண்டுமா

nathan

அழகு குறிப்புகள்:கைகளின் அழகு குறையாமலிருக்க. Beautiful hands

nathan