எங்கே பார்த்தாலும் சோலார் விளக்கு, சோலார் ஹீட்டர் எனப் பேசுகிறார்களே… வீட்டு உபயோகத்துக்கு சோலார் சக்தியைப் பயன்படுத்த வழி உண்டா?
சுந்தரேசன் ரங்கநாதன், டாட்டி (தமிழ்நாடு அட்வான்ஸ்டு டெக்னிகல் ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்) மொபைல் ரீசார்ஜர், லேப்டாப் ரீசார்ஜர், வாட்டர் ஹீட்டர் என பல உபயோகங்களுக்கும் சோலார் சக்தியைப் பயன்படுத்த முடியும். இப்போது லேட்டஸ்ட்டாக ரிமோட்டில் இயங்கும் எல்.இ.டி. விளக்குகள் வந்திருக்கின்றன. மொட்டை மாடி அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் சோலார் பேனலை பொருத்த வேண்டும். அது சின்ன காலண்டர் அளவில்தான் இருக்கும். செலவும் 2 ஆயிரம்தான். இந்த விளக்குகளைப் பொருத்த எலக்ட்ரீஷியன்கூடத் தேவையில்லை. பிளக் கனெக்ஷன் மூலம் இணைத்துவிடலாம். சீலிங்கில் விளக்கைப் பொருத்திவிட்டு, ரிமோட்டில் ஸ்விட்ச்சை இயக்கலாம்.
இவை தவிர சமையலறை உபயோகத்துக்கான சோலார் அடுப்புகள், சோலார் குக்கர் போன்றவையும் கிடைக்கின்றன. காய்கறிகளை உலர வைக்கிற சோலார் டிரையர்கள்கூடக் கிடைக்கின்றன. சூரிய சக்தியில் இயங்கும் அடிப்படையான இந்த உபகரணங்களை வீட்டில் பொருத்திக் கொள்வதன் மூலம் மின்சாரச் செலவை பெருமளவில் மிச்சப்படுத்தலாம். பராமரிப்பும் குறைவு. காற்று மாசடையாது.