31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
கால்கள் பராமரிப்பு

மழைக்காலத்தில் பாத பராமரிப்பு

இதோ இதோ என்று மழைக்காலம் வந்துவிட்டது. வாட்டிய வெயிலிருந்து நம்மை காப்பாற்றிவிட்டது. முழுவதுமாக அதை நினைத்து சந்தோஷப்படுவதற்குள் மழைக்காலத்திற்கென்றே உள்ள சில பிரச்னைகளும் கூடவே வந்துவிடும். அதில் முக்கியமானது சேற்றுப்புண். ஈரத்தினால் ஏற்படும் பூஞ்சை பேக்டீரியாக்களால் இவை உருவாகும். இப் பிரச்னை மட்டுமின்றி வேறு சில பிரச்னைகளும் வராமலிருக்க பாதத்தை முழுமையாக பராமரிக்க வேண்டும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சின்ன சின்ன வழிமுறைகள் தான். பூஞ்சைத் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க, உங்கள் பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். ஒவ்வொரு முறை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும், கால்களை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவவும். பிறகு, கால்களை ஈரம் போக நன்றாக துடைக்கவும்.

கால் நகங்களை வெட்டுங்கள் கால் நகங்களில் எப்போதும் அழுக்கு சேர்வது இயல்பு தான். ஆனால் மழை நீரில் நடக்கும் போது, அந்த அழுக்கே பூஞ்சைத் தொற்றாக மாற வாய்ப்புண்டு. எனவே கால் நகங்களை வெட்டி விடவும். சரியான காலணிகளை அணியுங்கள் ஷூக்கள் போட்டு மழை நீரில் நடக்கும் போது ஷூக்களுக்குள் நீர் இறங்கி நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மழைக் காலத்தில் கேன்வாஸ் ஷூக்கள் போடுவதைத் தவிருங்கள்.

உங்கள் கால்களுக்கு பெடிக்யூர் செய்வது இந்த மழைக் காலத்தில் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். காலணிகளை சுத்தம் செய்யுங்கள் கால்களை சுத்தமாக வைத்திருப்பது போல, நம் காலணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் அவசியம். வீடு திரும்பி, கால்களைக் கழுவிய கையோடு, காலணிகளையும் கழுவி நன்றாக உலர வைக்கவும்.

Related posts

டீடாக்ஸிங் எனப்படும் நச்சு நீக்க சிகிச்சைகள் பாதங்களின் வழியே..

nathan

கால்களை அழகாக்க இத செய்யுங்கள்!…

sangika

பித்த வெடிப்பு போகாதா?இதை முயன்று பாருங்கள்….

nathan

பித்த வெடிப்பு மூன்று நாட்களில் மறைய

nathan

கால் பாதத்தின் கருமையை போக்கும் வழிகள்

nathan

குதிகால் வெடிப்பை குணமாக்க வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்!..

sangika

உங்களுக்கு பாதங்களில் வெடிப்பு வர இது கூட ஒரு காரணமா இருக்கலாம்னு தெரியுமா?

nathan

ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?

nathan

பாதங்களில் உள்ள வெடிப்பை போக்க எளிய வழிகள்

nathan