201703141300173675 Cauliflower Masala Dosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த காலிபிளவர் மசாலா தோசை செய்து கொடுக்கலாம். இந்த காலிபிளவர் மசாலா தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை
தேவையான பொருட்கள் :

தோசை மாவு – 2 கப்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய காலிபிளவர் – 100 கிராம்
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 100 கிராம்
பெங்களூரு தக்காளி – ஒன்று
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காலிபிளவரை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காலிபிளவரையும் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் நன்கு வேகவைத்து இறக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு… தயார் செய்து வைத்த காலிபிளவர் மசாலாவை அதில் வைத்து பரவலாகத் தேய்த்து தோசையை மூடி வேகவிட்டு எடுக்கவும்.

* சூடான காலிபிளவர் மசாலா தோசை ரெடி!201703141300173675 Cauliflower Masala Dosa SECVPF

Related posts

சத்தான பச்சைப்பயறு துவையல்

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெண்பொங்கல்

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி

nathan

ஃபுரூட் கேக்

nathan

Easy சில்லி சப்பாத்தி கொத்து : செய்முறைகளுடன்…!

nathan

அமெரிக்கன் கார்ன் – சீஸ் பால்ஸ்

nathan

மரவள்ளிக் கிழங்கு புட்டு

nathan

பச்சைமிளகாய் காரச் சீடை

nathan

சத்தான சுவையான கோதுமை உசிலி

nathan