எடை குறைய

பெண்களின் உடல் எடை அதிகரிக்க இவை தான் காரணம்

பெண்களுக்கு உடல் பருமன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் இருப்பதுதான் காரணம்.

பெண்களின் உடல் எடை அதிகரிக்க இவை தான் காரணம்
பெண்களுக்கு உடல் பருமன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுவதும் கிடையாது. ஆனால் உடல் எடை கூடிவிட்டதே என பலர் சொல்லக் கேட்டிருப்போம்.

சரியாக உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் ஆண்களுக்கு உடல் எடை கூடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு ஏன் உடல் எடை கூடுகிறது ஏன் தெரியுமா? ஹார்மோன் சம நிலையில்லாமல் இருப்பதுதான் காரணம்.

இதனால் சும்மா வீட்டில் உட்கார்ந்தாலே உடல் எடை கூடிவிடும். அவர்கள் தினமும் உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

அப்படி எந்த ஹார்மோன்கள் உங்கள் உடல் எடை கூட காரணமாகும் என தெரிந்து கொள்ள கீழே படியுங்கள்.

பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைதான் ஹைபோதைராய்டிஸம். இதனால் அளவுக்கு அதிகமான உடல் பருமன், மன தளர்ச்சி, சோர்வு, மன அழுத்தம், வறண்ட சருமம் ஆகியவை உண்டாகும். தைராய்டு குறைவினால் வளர்சிதை மாற்றம் குறைந்து கொழுப்பு செல்கள் திசுக்களிலேயே தங்கிவிடும் அபாயம் உண்டு. எதிர்மாறாக தைராய்டு அதிகரித்தால் உடல் எடை மிகவும் குறைந்துவிடும்.

ஈஸ்ட்ரோஜன் பெண்களின் பாலின ஹார்மோன். இது சுரக்கும் வரை பல ஆபத்தான நோய்களிலிருந்து பெண்களை காப்பாற்றும். ஆனால் மெனோபாஸுக்கு பிறகு இது சுரப்பது குறைந்துவிடும். இதனால் கலோரிகளை கொழுப்பாக மாறி உடல் பருமனை உண்டாக்கிவிடும்.

மெனோபாஸ் சமயத்தில் இந்த ஹார்மோனும் குறைந்துவிடும். இது குறைவதனால் உடல் பருமன் உண்டாகாது. மாறாக உடலில் நீர் தங்கி, உடல் பருமனை தந்துவிடும்.

சில பெண்கள் PCOS எனப்படும் கருப்பை நீர்கட்டி பாதிப்பு இருக்கும். அதாவது கருப்பையில் நிறைய நீர்கட்டிகள் உருவாகி, மாதவிலக்கை சீரற்றதாக்கிவிடும். இதனால் உடல் பருமன், முகத்தில் நிறைய முடி ஆகியவை உண்டாகும். இதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோன் அதிகரிப்பதால்தான். இதனால் ஹார்மோன் சீராக இல்லாமல் உடல் பருமனை தந்துவிடும்.

இன்சுலின் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அளவை ஒழுங்குபடுத்த தேவையான ஹார்மோன். அது குறையும்போது அதிக குளுகோஸ் அளவு அதிகரித்து கொழுப்பாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. சர்க்கரை வியாதிக்கும் வழிவகுக்கும்.

கார்டிசால் அதிகரிக்கும்போது பசி அதிகரிக்கும். தூக்கமின்மையும் உண்டாகும். இதனால் மன அழுத்தமும் ஏற்படும். உடல் பருமன், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை எல்லாம் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டது. இதற்கு கார்டிசால் ஹார்மோன் அதிகரிப்பதும் காரணமாகும்.201703141426516380 hormones that make woman fat SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button