தற்போது பலரது உடலில் போதிய அளவில் ஆற்றல் மற்றும் வலிமை இல்லை. இதற்கு அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் உள்ள தவறு தான் காரணம். தவறான உணவுப் பழக்கவழக்கத்தினால், உடலின் ஆற்றல் மற்றும் வலிமைக்கு வேண்டிய காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின் சி, புரோட்டீன்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.
இப்படி உடலில் குறைவாக உள்ள சத்துக்களின் அளவை அதிகரித்தால் தான் உடல் வலிமையோடு இருப்பதோடு, சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும். அதிலும் நீங்கள் ஜிம் செல்பவராயின், கண்டிப்பாக இச்சத்துக்கள் அவசியம் தேவை. இவை இருந்தால் தான் ஜிம்மில் உடற்பயிற்சியை செய்ய முடியும்.
சரி, இப்போது உடலின் வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து அவற்றை உட்கொண்டு உங்கள் உடலை வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ளுங்கள்.
ஓட்ஸ் ஓட்ஸில் சுத்திகரிக்கப்படாத கார்ப்போஹைட்ரேட் உள்ளதால், இவை மெதுவாக செரிமானமாகி, இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரித்து, நீண்ட நேரம் உடலில் ஆற்றலைத் தக்க வைக்கும். எனவே நீங்கள் எப்போதும் மந்தமாக இருப்பதை உணர்ந்தால், ஓட்ஸை காலை வேளையில் உட்கொண்டு வாருங்கள்.
பருப்பு வகைகள் பருப்பு வகைகளில் கனிமச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை இரத்த சிவப்பணுக்களை உருவாக்கி, தசைகள் மற்றும் உடலின் இதர பாகங்களுக்கு ஆக்ஸிஜன் சீராக செல்ல வழிவகுத்து, உடலை ஆற்றலுடனும், உறுதியுடனும் வைத்துக் கொள்ள உதவும்.
காபி காபி உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க உதவும் ஓர் பானம். இந்த பானத்தைக் குடித்தால், மைய நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, சோர்வு உடனடியாக நீக்கப்படும்.
பச்சை இலைக் காய்கறிகள் பச்சை இலைக் காய்கறிகளில் உடலின் வலிமை மற்றும் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் மைக்ரோ நியூட்ரியன்ட்டுகள் அதிகம் உள்ளது. மேலும் இவைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதோடு, மெதுவாக செரிமானமாகி, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும்.
வாழைப்பழம் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இவை டோபமைன் என்னும் கெமிக்கலை உற்பத்தி செய்து, ஆற்றலுடன் நீண்ட நேரம் இருக்க உதவுவதுடன், கவனத்தை அதிகரிக்கவும் உதவும்.
வேர்க்கடலை வெண்ணெய் வேர்க்கடலை வெண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளதால், அவை இதய ஆரோக்கியத்தை அதிகரித்து, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும் வேர்க்கடலை வெண்ணெய் ஓர் சிறந்த ஆற்றல் மற்றும் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருள். இதில் கலோரிகள் அதிகம் மற்றும் மெதுவாக செரிமானமாகும். முக்கியமாக வேர்க்கடலை வெண்ணெயை காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுடன் சேர்த்து எடுத்துக் கொள்வது நல்லது.
மீன், சிக்கன், முட்டை இவைகளில் புரோட்டின் அதிகம் உள்ளது. இவை தசைகளின் வளர்ச்சிக்கும், புதுப்பிக்கவும் உதவும். மேலும் இவைகள் மெதுவாக செரிமானமாவதோடு, நீண்ட நேரம் சுறுசுறுப்புடனும், வலிமையோடும் இருக்க உதவும்.
சிவப்பு திராட்சை சிவப்பு திராட்சையில், உடலின் ஆற்றலை அதிகரிக்கும் ரெஸ்வெரடால் உள்ளது. மேலும் இதில் குறைந்த அளவில் சர்க்கரை உள்ளதால், இவை உடனடி ஆற்றலை வழங்குவதோடு, உடலின் உறுதியையும் மேம்படுத்த உதவும்.
பீட்ரூட் ஜூஸ் உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு டம்ளர் பீட்ருட் ஜூஸ் குடித்தால், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும். ஏனெனில் பீட்ரூட்டில் உடல் உறுதியை அதிகரித்து, சோர்வைக் குறைக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது.
திணை தானியங்களுள் ஒன்றான திணையில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்க்கத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றைக் கொண்டு கஞ்சி அல்லது உப்புமா செய்து உட்கொண்டு வந்தால், நீண்ட நேரம் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மேலும் இது பத்தே நிமிடங்களில் வேகக்கூடியது என்பதால் விரைவில் சமைத்து சாப்பிட ஏற்ற ஓர் உணவுப் பொருள்.