மருத்துவ குறிப்பு

மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை நோய்கள்

பொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது கர்ப்பப்பை கோளாறுகளே! கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களை பார்க்கலாம்.

மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை நோய்கள்
பொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது கர்ப்பப்பை கோளாறுகளே! இந்த கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களின் பட்டியல் இதோ கீழே உங்கள் பார்வைக்கு…

கர்ப்பப்பை தொடர்பான அபாய நோய்கள், பாதிப்புகள் இவை.

1) டிஸ்மெனோரியா
– மாதவிலக்குப் பிடிப்பு

2) பைப்ராய்ட்ஸ்
– கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.

3) கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய்
– பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.

4) எண்டோமெட்ரியோசிஸ்
– கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்.

5) புரோலாப்ஸ்?
– பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.

6) எக்டோபிக் கருவுறுதல்
– கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக் குழாய் களில் கரு வளர்வது.

7) ஹிஸ்டீரக்டாமி (கர்ப்பப்பையை நீக்குவது)
– கடுமையான, குணப்படுத்த முடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப்புற்று நோய், எண்டோமெட்ரி யோசிஸ், புரோலாப்ஸ் , தொடர்ச்சியான ரத்தப் போக்கின்போது இது பரிந்துரைக்கப்படுகிறது.

8) கர்ப்பப்பை புற்றுநோய்
– மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் 90% குணப்படுத்திவிட முடியும். ஒழுங்கற்ற ரத்தப்போக்கு, பொதுவான அறிகுறியாகும்.201702271351585167 uterus cervical diseases for women SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button