32.3 C
Chennai
Tuesday, Jun 25, 2024
201702251353274805 natural face pack SECVPF
சரும பராமரிப்பு

சருமத்தை பொலிவாக்கும் இயற்கை பேஸ்பேக்

அனைவருக்கும் மாசு, மருவின்றி, பளிங்கு போல் சருமம் விருப்பமானதாகவே இருக்கும். உங்கள் சருமத்தை மிக மிருதுவாகவும் பளிச்சென்றும் வைத்திருக்க இந்த பேஸ்பேக்கை பயன்படுத்தலாம்.

சருமத்தை பொலிவாக்கும் இயற்கை பேஸ்பேக்
கண்ட அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விரைவில் முதுமைத் தோற்றத்தைத் தான் பெறக்கூடும். இயற்கை முறையில் சருமத்தை பராமரித்தால் மட்டுமே சருமம் பொலிவுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

ரோஸ் வாட்டர் – 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
சந்தனப் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முதலில் ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனப் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, மஸ்லின் துணியைப் பயன்படுத்தி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிவிட வேண்டும். இப்போது கெட்டியான ஒரு பேஸ்ட் கிடைத்திருக்கும்.

பின்பு அத்துடன் கற்றாழை ஜெல், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும்.

தினமும் இரவில் படுக்கும் முன், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, துணியால் துடைத்துவிட்டு, தயாரித்து வைத்துள்ள க்ரீம்மை முகத்தில் தடவ வேண்டும். மசாஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும். 201702251353274805 natural face pack SECVPF

Related posts

உடலிலுள்ள முடியை நீக்க சிறந்த முறை ஷேவிங்கா? வேக்சிங்கா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்கள் வீட்டில் இருந்தபடியே மெனிக்யூர் செய்வது எப்படி எனத் தெரியுமா

nathan

பெண்கள் என்றும் இளமையாக இருக்க இதோ டிப்ஸ்.

nathan

சருமத்தை பளபளப்பாக்கும் பச்சை திராட்சை

nathan

சருமத்தை பளபளப்பாக்கும் ஆரஞ்சுத் தோல் டீ

nathan

பால் தரும் பட்டு போன்ற சருமம்

nathan

உங்களுக்கு தெரியுமா கொரிய நாட்டுப் பெண்கள் தங்கள் அழகுக்காக இதெல்லாமா செய்வார்கள்!

nathan

குளிக்கும் பொழுது வியர்வை நாற்றம் போக

nathan

அன்றாடம் நம் சருமத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்கள் குறித்த உண்மைகள்!

nathan