37.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
back acne 15 1455530793
சரும பராமரிப்பு

உங்களுக்கு முதுகில் பருக்கள் அதிகமாக உள்ளதா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

பருக்கள் முகத்தில் மட்டுமின்றி, உடலின் பல பகுதிகளிலும் வரும். அதில் முகத்திற்கு அடுத்தப்படியாக அதிகம் வரும் பகுதி என்றால் அது முதுகில் தான். ஆம், நிறைய பேருக்கு முதுகில் ஏராளமான பருக்கள் இருக்கும்.

இப்படி முதுகில் பருக்கள் வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மோசமான டயட், மன அழுத்தம், உடுத்தும் உடை போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை.

சில நேரங்களில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமான அளவில் எண்ணெய் சுரந்து, இறந்த செல்களுடன் சருமத்துளைகள் அடைக்கப்பட்டு விடுவதால் ஏற்படுகின்றன.

சரி, இந்த பிரச்சனைக்கு தீர்வே இல்லையா என்று கேட்கலாம். நிச்சயம் உள்ளது. அதிலும் நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிமையான முறையில் முதுகில் உள்ள பருக்களைப் போக்கலாம். சரி, இப்போது அவற்றைப் பார்ப்போமா!!!

ஆப்பிள் சீடர் வினிகர்
1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகரை 3 பங்கு நீரில் கலந்து, அதனை பாதிக்கப்பட்ட முகுதுப் பகுதியில் காட்டன் பயன்படுத்தி தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.

தக்காளி
தக்காளியை இரண்டாக வெட்டி, அதனை நேரடியாக முதுகில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முதுகில் உள்ள பருக்கள் மட்டுமின்றி, அதனால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

கற்றாழை
கற்றாழை ஜெல்லை தினமும் முதுகில் தடவி வர, பருக்களால் முதுகில் ஏற்படும் சிவப்பும், வீக்கமும் குறையும். ஏனெனில் கற்றாழையில் அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

சந்தனம்
சந்தனம் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைப் போக்கும். அதற்று சந்தனத்தை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முதுகில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறும் முதுகில் உள்ள பருக்களைப் போக்கும். அதற்கு சரிசம அளவில் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முதுகில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன் மூலமும் முதுகில் உள்ள பருக்கள் மறையும்.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் 1-2 முறை செய்து வந்தால், விரைவில் முதுகில் உள்ள பருக்களைப் போக்கலாம்.

பூண்டு
1 பூண்டை எடுத்து அரைத்து, அதனை சிறிது முதுகில் தடவி ஊற வைத்து கழுவ, பருக்கள் நீங்குவதோடு, அதனால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

மஞ்சள்
புதினா ஜூஸ் மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முதுகில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, முதுகில் உள்ள பருக்கள் நீங்கும்.

தேன்
தேன் மிகவும் சிறப்பான நோயெதிர்ப்புப் பொருள். உங்களுக்கு முதுகில் பருக்கள் அதிகம் இருப்பின், தேனை நேரடியாக அல்லது தயிருடன் சேர்த்து கலந்து, முதுகில் தடவிக் கொள்ளவும். இல்லையெனில் 3 டேபிள் ஸ்பூன் தேனுடன் 1 டேபிள் ஸ்பூன் பட்டைத் தூளுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முதுகில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்ம்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா கூட முதுகில் உள்ள பருக்களைப் போக்க உதவும். அதற்கு பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முதுகில் தடவி 10-15 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். முக்கியமாக பேக்கிங் சோடாவை 15 நிமிடத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டாம்.
back acne 15 1455530793

Related posts

குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்சனைகள்

nathan

குங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.

nathan

சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள

nathan

வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே!

nathan

பதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!!!

nathan

வறண்ட சருமத்தை பாதுகாக்கும் ஆரஞ்சு

nathan

முகத்துக்கு சூப்பர் டிப்ஸ் ! !

nathan

பீட்ரூட் நமது உதட்டுக்கும் நன்மை செய்கிறது என்றால் நம்புவீர்களா?

nathan

வேனிட்டி  பாக்ஸ்: ஃபவுண்டேஷன்

nathan