நார்த்திசுக்கட்டிகள் என்பவை கருப்பையில் ஏற்படும் இணைப்பு திசு வளர்ச்சி ஆகும். நார்த்திசுக்கட்டிகளின் அறிகுறிகளைப் பல பெண்களால் உணர இயலாது, ஆனால் அவை அதிக மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கை ஏற்படுத்தும்.
ஓபிசிட்டி, ஹைபோதைராய்டிஸம், குறைந்த நார்ச்சத்துள்ள உணவு போன்றவற்றால் நார்த்திசுக்கட்டிகள் உருவாவதோடு, அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் மற்றும் குறைந்த அளவு புரோஜெஸ்டிரோனை உருவாக்கும்.
இயற்கை நார்த்திசுக்கட்டி சிகிச்சைக்கு உணவு திருத்தம் மிகவும் முக்கியமானதாகும். இவை வலியிலிருந்து விடுதலை அளிப்பதோடு, அடிநிலை பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
ஆர்கானிக் உணவுகள் கெமிக்கல் கலந்த பூச்சிக்கொல்லிகள், ஈஸ்ட்ரோஜன் மற்றும் பிற ஹார்மோன்களை பாதிக்கும். எனவே ஆர்கானிக் உணவுகளை மட்டுமே தேர்வு செய்வது முக்கியம்.
அதிக இரும்புச்சத்து கொண்ட உணவுகள் நார்த்திசுக்கட்டிகளால் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கால், உடலில் இரும்புச்சத்து சீராக பராமரிக்கப்பட வேண்டும். அதற்கு உங்கள் உணவில் அதிக இரும்புச்சத்து கொண்ட இறைச்சி, பருப்பு வகைகள், மாட்டிறைச்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
ஆளி விதை, சியா மற்றும் சணல் விதைகள் ஈஸ்ட்ரோஜன் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள ஆளி விதை உதவும். எனவே நாள் ஒன்றுக்கு இரண்டு டீஸ்பூன் இதனை எடுத்துக் கொள்வதை நோக்கமாக கொள்ளுங்கள்.
முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி அதிகப்படியான இண்டோல்-3-காபினோல் மற்றும் குறுக்குவெட்டு காய்கறிகள் கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை அகற்றவும், ஈஸ்ட்ரோஜன் அளவை சமப்படுத்தவும் உதவுகின்றன.
பச்சை இலை காய்கறிகள் இந்த பச்சை இலைக் காய்கறிகள் வைட்டமின் கே சத்தை அதிகம் கொண்டுள்ளதால், இவை இரத்தம் உறைதல் மற்றும் மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவும்.
அதிக கொழுப்பு கொண்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக கொழுப்புக்களைக் கொண்ட இறைச்சியை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை வீக்கத்தை அதிகப்படுத்தும்.
பாக்கெட் பால் பொருட்கள் பாக்கெட் பாலில் ஊக்கப் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் மிகவும் அதிகமாக உள்ளன. இவை ஹார்மோன்களில் மாற்றங்களை செய்யும்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை வயிற்று வலியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டைக் குறைக்கும்.
மது மது வீக்கத்தை அதிகரிக்கிறது. மேலும், நோயெதிர்ப்பு செயல்பாட்டைக் குறைக்கிறது.
காப்ஃபைன் காப்ஃபைன் உள்ள பானங்களான டீ, காபி, சோடா போன்றவை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.