22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

துளசி இலையின் மருத்துவ குணங்கள்

thulasiஎளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.
வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்

Related posts

என்ன  எடை  அழகே!

nathan

சுவையான டயட் மிக்சர் செய்து பாருங்கள்….

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கழிவறையிலும், குளியலறையிலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

nathan

உடல் குளிர்ச்சியாக வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!….

sangika

பதின்ம பருவம் பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

nathan

ஹை-ஹீல்ஸ் ஆபத்து

nathan

பெண்கள் தங்களின் காதலரை பற்றி நம்பும் பொய்கள் என்னென்ன தெரியுமா?

nathan

உடற்பயிற்சிக்கு முன் உப்பு உட்கொள்வதால் ஏதேனும் நன்மை உண்டா?

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவதினால் கிடைக்கும் பலன்கள்!

nathan