25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cavities 05 1478321569
மருத்துவ குறிப்பு

சொத்தைப் பல்லை இயற்கை வழியில் போக்குவது எப்படி?

வாயில் உள்ள பாக்டீரியாக்களின் பெருக்கத்தால், பற்களின் எனாமல் அரிக்கப்பட்டு ஏற்படும் நிலை தான் சொத்தைப் பல். இந்த நிலையின் போது பற்களின் உள் அடுக்கான டென்டின் பாதிக்கப்படும் மற்றும் பற்களின் நிலையும் பாதிக்கப்படும்.

நிறைய பேர் சொத்தைப் பற்களைப் போக்க பல் மருத்துவரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்வார்கள். ஆனால் சொத்தைப் பற்களை இயற்கை வழியிலேயே போக்க முடியும். அதற்கு ஒருசில செயல்களை மனதில் கொண்டு பின்பற்ற வேண்டும்.

இங்கு சொத்தைப் பற்களை இயற்கை வழியில் எப்படி போக்குவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அதன்படி நடந்தால், நிச்சயம் சொத்தைப் பற்கள் விரைவில் போய்விடும்.

சொத்தைப் பற்கள் வரக் காரணங்கள்
சொத்தைப் பற்கள் உணவுகளால் தான் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் கனிமச்சத்துக்களின் குறைபாடு, கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின்களின் குறைபாடு, அளவுக்கு அதிகமான சர்க்கரை உணவுகளை உண்பது மற்றும் பைட்டிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதாலும் தான் சொத்தைப் பற்கள் ஏற்படும்.

சர்க்கரை உணவுகளைத் தவிர்க்கவும்
சொத்தைப் பற்கள் இருந்தால், சர்க்கரை நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சர்க்கரை வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்கு ஊட்டமளித்து, எச்சிலின் ஆரோக்கியத்தைத் தடுத்து, எச்சிலை அமிலமாக்கி, பற்களை மேன்மேலும் சொத்தையாக்கும். ஆகவே சர்க்கரை உணவுகளுக்கு குட்-பை சொல்லி விட வேண்டும்.

ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணவும்
சொத்தைப் பற்களை எதிர்த்துப் போராட, கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், அவகேடோ, தேங்காய் எண்ணெய், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், பற்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

பைட்டிக் அமில உணவுகளை அகற்றவும்
பைட்டிக் அமிலம் தானியங்கள், வேர்க்கடலை, மைதா, சோளம், கோதுமை, பருப்பு வகைகள் போன்றவற்றில் ஏராளமாக உள்ளது. இந்த உணவுகளை சொத்தைப் பல் இருக்கும் ஒருவர் சாப்பிட்டால், அது மேலும் சொத்தைப் பற்களை மோசமாக்கும்.

ஆயில் புல்லிங்
தினமும் காலையில் எழுந்ததும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி, 20 நிமிடம் கொப்பளித்து துப்பிய பின், பிரஷ் செய்ய வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள், ஈறு நோய்கள் போன்றவை தடுக்கப்படுவதோடு, தலைவலி குறையும்.

நேச்சுரல் டூத் பேஸ்ட்
கடைகளில் விலைக் குறைவில் விற்கப்படும் டூத் பேஸ்ட்டுகளில் ப்ளூரைடு அதிகம் உள்ளது. இந்த ப்ளூரைடு பற்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ப்ளூரைடு இல்லாத டூத் பேஸ்ட் விலை அதிகமாக இருக்கும். ஆனால் ப்ளூரைடு இல்லாத டூத் பேஸ்ட்டை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

பேஸ்ட் தயாரிக்கும் முறை உணவு தர டயட்டோமேஷியஸ் களிமண் – 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன் குளோரோஃபில் நீர்மம் – 1/4 டீஸ்பூன் புதினா சாறு – 1/4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 1/2 டீஸ்பூன் தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்தால், டூத் பேஸ்ட் தயார். இதைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்கினால் சொத்தைப் பற்கள் போய்விடும்.

cavities 05 1478321569

Related posts

சிறுநீரில் ரத்தம்

nathan

மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்

nathan

தாயின் உயிருக்கு ஆபத்தாகும் கருக்குழாய் கர்ப்பம் – கண்டறிவது எப்படி?

nathan

‘பிசியோதெரபி’ மருத்துவத்தின் நன்மை என்ன என்று தெரியுமா?….

sangika

இதோ அற்புதமான எளிய தீர்வு! இந்த 5 உணவுகளை சாப்பிட்டு வந்தால் போதும்.. ஆண்மை குறைபாட்டு தீர்வு அளிக்குமாம்!

nathan

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்-தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு மார்பகங்களின் வடிவத்தை நன்றாக மாற்றிட சில வழிகள்!!!

nathan

சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வெந்நீரே… வெந்நீரே…

nathan