23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
eeeral 1
அசைவ வகைகள்

இறால் பஜ்ஜி

தேவையான பொருட்கள்:

இறால் (பெரியது) – 500 கிராம்
கோதுமை மா – 250 கிராம்
சோள மா – ஒரு மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் — ஒரு தேக்கரண்டி
கேசரி பவுடர் – சிறிது
நசுக்கிய பூண்டு – 8 பற்கள்
மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – – பொரிப்பதற்கு தே. அளவு

செய்முறை:
தேவை­யான பொருட்கள் அனைத்­தையும் தயா­ராக எடுத்து வைக்­கவும். கோதுமை மாவுடன் சோள மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்­ளவும். சலித்த மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்­திற்கு கரைத்து 2 மணி நேரம் புளிக்­க­ விடவும்.

இறாலின் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்­ளவும். அத்­துடன் பூண்டை நசுக்கிப் போடவும் (அல்­லது) இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்­கவும். அத்­துடன் கேசரி பவுடர், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசறி வைக்­கவும்.

பாத்­தி­ரத்தில் எண்ணெய் ஊற்றி காய­விட்டு, இறாலை கோதுமை மாவுக் கரை­சலில் தோய்த்­தெ­டுத்து எண்­ணெயில் போட்டு, மித­மான தீயில் வைத்து பொரித்து எடுக்­கவும்.

சுவை­யான இறால் பஜ்ஜி ரெடி. இதை சில்லி சோஸ் உடன் சாப்­பிட்டால் சுவை­யா­ன­தாக இருக்கும்.
eeeral

Related posts

தந்தூரி சிக்கன் பிரியாணி : செய்முறைகளுடன்…!

nathan

பசலைக்கீரை முட்டை பொரியல்

nathan

ஃபிங்கர் சிக்கன்

nathan

காலிஃப்ளவர் முட்டை பொரியல்

nathan

ஆத்தூர் மட்டன் மிளகு கறி

nathan

சூப்பரான மட்டன் கீமா புலாவ்

nathan

சூப்பரான காரமான பெங்காலி மீன் குழம்பு

nathan

சுவையான கல்மி கபாப்

nathan

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான தந்தூரி சிக்கன்

nathan