30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
rain 17 1476700763
சரும பராமரிப்பு

மழை நீரால் உங்கள் சருமத்தை எப்படி சுருக்கமின்றி பொலிவாக்கலாம் என தெரியுமா?

குளிர் மற்றும் மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை அதிகப்படியாக பாதுகாக்க வேண்டும். அந்த சமயங்களில்தான் சருமம் அதிக வறட்சியை சந்திக்கிறது.

காரணம் போதிய அளவு நாம் நீர் அருந்த மாட்டோம். வியர்வை சுரப்பிகள் இயங்காது. இதனால் சருமத்தில் இறந்த செல்கள் தேங்கி, புதிய செல்களின் உருவாக்கும் குறைந்து சுருக்கம், சருமத்தை கீறினால் வெள்ளையாக கோடு ஆகியவை ஏற்படுகிறது.

குளிர்காலம் அப்படித்தான் இருக்குமென அப்படியே விட்டால் சுருக்கம் எற்படும். பின் எளிதில் சுருக்கங்கள் மறையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்கள் சருமத்தை குளிர்காலத்தில் காப்பாற்ற இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்.

மழை நீர் மற்றும் தேன் :
தேவையானவை :

மழை நீர் 1 கப்.
தேன் – 1 ஸ்பூன்
செய்முறை :
மழை நீரில் தேனை கரையும் வரை கலந்திடுங்கள். பின்னர் அதனை முகம் மற்றும் கைகளில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கழுவினால் சருமம் மினுமினுக்கும்.

தேவையானவை :
முல்தானி மட்டி – 1 கப்
கற்பூரம்- 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – கலக்க தேவையானது.

செய்முறை :
முல்தானிமட்டியில் கற்பூரத்தை பொடி செய்து சேர்த்துங்கள். அதில் தேவையான அளவு ரோஸ் வாட்டரை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தேய்க்கவும்.
காய்ந்தம் கழுவுங்கள். முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறைந்துவிடும். சுருக்கங்கள் மறைந்து சருமம் மறையும். ஈரப்பதம் தேவையான அளவு இருக்கும்.

தேவையானவை :
முல்தானி மட்டி – 1 கப்
சந்தனப் பொடி – 2 ஸ்பூன்
துளசி இலை – 10 இலைகள்
கிராம்பு எண்ணெய்- 1 துளி
ரோஸ் வாட்டர் – கலக்க தேவையான அளவு

செய்முறை : இவை எல்லாவற்றையும் கலந்து முகத்தில் போடவும். இது சருமத்திலுள்ள அழுக்குகளை சுத்தப்படுத்தும். அதோடு சருமப் பொலிவை தரும்.

தேவையானவை : முல்தானி மட்டி – 1 கப் வேப்பிலை பேஸ்ட் – 2 ஸ்பூன் கிராம்பு எண்ணெய் – 2 துளி

செய்முறை : இந்த எல்லாபொருட்களையும் ஒன்றோடொன்று கலந்து முகத்தில் தடவவும். முகப்பருக்கள், கருமை, மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் ஜொலிக்கும்.

rain 17 1476700763

Related posts

இரவு க்ரீம் உபயோகப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

சருமத்தை அழகாக்கும் கற்றாழை ஜெல் மாஸ்க்

nathan

சரும பிரச்சனைகளை போக்க சில வழிமுறைகள்……

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

nathan

உங்களுக்கு தெரியுமா கால்களில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பது எப்படி?

nathan

பெண்களின் அழகை கெடுக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்கும் எண்ணெய்கள்

nathan

சரும வறட்சியைத் போக்கும் இயற்கை லோசன்கள்

nathan

பெண்கள் சருமத்தை அழகாக்கும் முறைகள்

nathan

வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

nathan