அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சருமத்தைப் பாதுகாப்பதுப் எப்படி?…..

தினந்தோறும் பல்வேறுபட்ட சருமப் பிரச்சினைகளிற்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது. அதிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்கு பல முயற்சிகளை செய்தாலும் போதியளவு தீர்வு கிடைக்கவில்லை என்பதே உண்மை.

இந்த சருமப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணாம் ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மை, சூழல் மாசு, அதிகமான சூரியக் கதிர்களின் பாதிப்பு போன்றவையே.

இதிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து பொலிவாக வைத்திருப்பது என்பது மிகவும் சவாலான விடயமே. இதோ உங்களுக்காக எளிய முறைகளில் வீட்டிலேயெ இருந்து சருமத்தைப் பாதுகாப்பதுப் எப்படி என்பதை இங்கே பார்ப்பொம்.

Beautiful Pictures of Hansika Motwani

பளபளப்பான சருமத்திற்கு செய்ய வேண்டிய 5 விடயங்கள்:

1. நீராவி பிடித்தல்:
குறைந்தது 10 நிமிஃபங்களாவது ஆவி பிடிப்பதனால் முகத்தில் உள்ள சருமத் துவாரங்கள் திறப்பதுடன், தேவையற்ற கழிவுகளை நீக்கி விட முடியும். ஆனால் அளவுக்கதிகமான வெப்பம் சருமத்தை பாதிப்படையச் செய்து விடும்.

2. டோனரைப் பயன்படுத்தல்:
டோனரைப் பயன்படுத்துவதனால் சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்துவதுடன் தேவையற்ற எண்ணெய்த் தன்மைகளைக் கட்டுப்படுத்தும்.

  • கற்றாளை டோனர்:
    கற்றாளைச் சாற்றை நீருடன் கலந்து பஞ்சினால் முகத்தில் தடவவும். சிறிது நேரத்தின் பின் நீரினால் கழுவவும்.
  • எலுமிச்சைச் சாறு:
    1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன் நீர் கலந்து அதனை பஞ்சினால் முகத்தில் தடவும். பின்பு தோலினால் தேய்ப்பதனால் அதிகளவான் எண்ணெய்த் தன்மைகளை கட்டுப்படுத்தும்.

3. இறந்த கலங்களை நீக்குதல்:
சருமம் பளபளப்பாகவும் இளமையாகவும் இருப்பதற்கு செய்ய வேண்டியது அதில் காணாப்படும் இறந்த கலங்களை நீக்குவதே. இதற்கு பல ஸ்கிறப்களை பயன்படுத்தலாம்.

  • சுகர் ஸ்கிறப்:
    தேவையானவை:
    1 மேசைக்கரண்டி சுகர்.
    1-2 துளி எலுமிச்சை அல்லது தோடம்பழச் சாறு
  • பயன்படுத்தும் முறை:
    சேர்மானக்கள் எல்லவற்றையும் சேர்த்து சுத்தமான சருமத்தில் ஸ்கிறப் செய்து நீரினால் கழுவவும்.
  • தேனும் தோடம்பழமும்:
    தேவையானவை:
    • 2 மேசைக்கரண்டி பவுடராக்கிய தோடம்பழத் தோல்.
    • 1 மேசைக்கரண்டி ஓட்ஸ்.
    • 2-3 மேஎசைக்கரண்டி தேன்.

    பயன்படுத்தும் முறை:
    சேர்மானங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை சருமத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்து பூசிக் கொள்ளவும். அது தானக் உலர்ந்த பின் நீரினால் கழுவவும்.

4. பேஸ் மாஸ்க்:
சருமத்தை சுத்தப்படுத்திய பின்பு பேஸ் மாஸ்க் பயன்படுத்துவது அவசியமானது.

  • பால் மாஸ்க்:
    பால் பவுடர் சிறிதளவு எடுத்து நீர் கலந்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை சருமத்தில் தடவி முற்றாக உலர்ந்த பின்பு நீரினால் கழுவவும்.

5. உடற்பயிற்சி:
தினமும் 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதனால் உடல் மட்டுமல்லாது மனமும் புத்துணார்ச்சி பெறுகின்றது.

  • மொய்ஸ்டரைசர்:
    சருமம் ஈரப்பதமாக இருப்பதனால் நாள் முழுவதும் பளபளப்பைப் பெற முடியும். எனவே உங்களது சருமத் தன்மைக்கு ஏற்றவாறு சரியான மொய்ஸ்டரைசர் பயன்படுத்துவது அவசியமானது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button