26.7 C
Chennai
Sunday, Feb 23, 2025
201702161036264414 Pepper peanut rice SECVPF
ஆரோக்கிய உணவு

குழந்தைகளுக்கு சத்தான மிளகு – வேர்க்கடலை சாதம்

குழந்தைகளுக்கு சத்தான ஒரு லன்ஞ் செய்து கொடுக்க விரும்பினால் மிளகு – வேர்க்கடலை சாதம் செய்து கொடுக்கலாம். இப்போது இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு சத்தான மிளகு – வேர்க்கடலை சாதம்
தேவையான பொருட்கள் :

சாதம் – 1 கப்,
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை – கால் கப்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி தழை – சிறிதளவு

தாளிக்க:

கடலைப் பருப்பு,
உளுந்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சாதத்தை உதிரியாக வடித்து 1/2 டீஸ்பூன் நெய் கலந்து வைக்கவும்.

* வெறும் கடாயில் மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு இரண்டையும் போட்டு வறுத்து பொடித்து கொள்ளவும்.

* கடாயில் நெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சாதத்தில் கொட்டி, பொடித்த மிளகு, உளுந்து பொடியை சேர்த்து வறுத்த வேர்க்கடலை, உப்பு சேர்த்து ஒரு புரட்டு புரட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சூப்பரான மிளகு வேர்க்கடலை சாதம் ரெடி.201702161036264414 Pepper peanut rice SECVPF

Related posts

வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

nathan

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது

nathan

உங்களது “மூட்”-ஐ உடனடியாக அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த பிரச்சினை உள்ளவர்கள் தெரியாமகூட கொய்யாப் பழம் சாப்பிடக்கூடாதாம்!

nathan

தினமும் காலை பார்லி கஞ்சி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

nathan

புற்றுநோயை உண்டாக்கும் டீ பேக்

nathan

மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan

சூப்பர் டிப்ஸ்! சத்து குறைபாட்டால் ஏற்படும் குறைபாட்டை தடுக்க சாத்துக்குடி!!

nathan

தெரிஞ்சிக்கங்க… பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்!

nathan