சத்து மிக்க பழங்களும் ஓட்ஸ் மற்றும் பால் கலந்த அருமையான உணவை காலையில் எடுத்து கொள்ளலாம். இப்போது இந்த ஓட்ஸ் பழ சாலட்டை செய்து எப்படி என்று பார்க்கலாம்.
காலையில் சாப்பிட சத்தான ஓட்ஸ் பழ சாலட்
தேவையான பொருட்கள் :
மாம்பழம், ஆப்பிள், பேரீச்சை, மாதுளை, வாழைப்பழம் சேர்ந்த கலவை – 2 கப்
பால் 2 கப்
ஓட்ஸ் – கால் கப்
உப்பு – ஒரு சிட்டிகை
தேன் – 2 மேசைக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 2 மேசைக்கரண்டி
செய்முறை :
* பழங்களை தேவையான வடிவில் வெட்டி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் ஏற்கனவே காய்ச்சிய பாலை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கும்போது ஓட்ஸ் மற்றும் உப்பைச் சேர்க்கவும். ஒரு சில நிமிடங்களில் ஓட்ஸ் வெந்து குழைந்து விடும்.
* ஓட்ஸ் வெந்தவுடன் இறக்கி ஆற வைத்து ஓட்ஸ் கலவை கெட்டியாக இருந்தால் மேலும் பால் ஊற்றி தளர இருக்குமாறு கலக்கவும்.
* இந்த ஓட்ஸ் கலவையில் பழங்கள், திராட்சை, தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* அதை கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும்.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழங்கள், வாழைப்பழங்களை நீக்கி விடவும். விரும்பிய பழங்களையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.