பெண்கள் தாமதமாக பருவம் அடைவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது ஆபத்தா என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் தாமதமாக பூப்பெய்துவது நல்லதா?
பூப்பெய்தல் பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வாகும், ஒரு சிலர் மிக சீக்கிரமாகவும், தாமதமாகவும் பூப்பெய்துகின்றனர்.
பெண்கள் தாமதமாக பருவம் அடைவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது ஆபத்தா என்பதை பற்றி பார்ப்போம்.
பெண்கள் தாமதமாக பூப்பெய்துவது நல்லதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் செய்த போது, பெண்கள் அவர்களின் 12 வயதிற்கு மேல் பூப்பெய்து, 50 வயதிற்கு மேல் மெனோபஸ் நிலையை அடைந்தால் அவர்கள் 90 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என்று ஆராய்ச்சியில் கூறுகிறது.
மேலும் தாமதமாக பூப்பெய்தும் பெண்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதாகவும், தாமதமாக மெனோபஸ் அடையும் பெண்களுக்கு உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றார்கள்.
தாமதமாக மெனோபஸ் நிலையை அடையும் பெண்களுக்கு இதயம் வலுவாக இருக்க அவர்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக தூண்டப்படுகின்றது. இதனால் அவர்களின் உடல்நிலை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் விரைவில் பூப்பெய்தும் பெண்கள் புகைப்பிடித்தால், அவர்களின் இதயம் மற்றும் கருப்பையில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.