24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
E0AEAEE0AE95E0AF8DE0AE95E0AEBEE0AE9AE0AF8DE0AE9AE0AF8BE0AEB3 E0AE9AE0AF81E0AEA3E0AF8DE0AE9FE0AEB2E0AF8D
​பொதுவானவை

சுவையான சத்தான மக்காச்சோள சுண்டல் செய்வது எப்படி?

மக்காச்சோளத்தில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. மக்காச்சோள சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மக்காச்சோளம் – ஒரு கப்,
கடுகு – கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்,
சீரகம் – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க:

இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய், பூண்டு பல் – தலா 2,
சோம்பு – கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

* மக்காச் சோளத்தை 8 மணி நேரம் ஊற வைத்த பின் குக்கரில் வேக வைக்கவும்.

* அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெந்த சோளம், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, தண்ணீர் சிறிது தெளித்து நன்கு கிளறி விடவும்.

* 2 நிமிடம் கழித்து தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

* சுவையான சத்தான மக்காச்சோள சுண்டல் ரெடி.%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3 %E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D

Related posts

பச்சை பயறு மிளகு மசாலா

nathan

திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டுமா?

nathan

க‌ணவரை முந்தானையில் முடிந்து கொள்ள‍ பெண்களுக்கு ஆலோசனைகள்

nathan

தமிழ் மொழியில் பழங்களின் பெயர்

nathan

பெண்களின் அன்பை பெற எளிய அறிவுரைகள்

nathan

குளிர்ச்சியான வெள்ளரிக்காய் பச்சடி / ரைத்தா

nathan

சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளின் விளைவுகள்……

sangika

குழந்தை வளர்ப்பில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பங்குண்டு

nathan

உடலுக்கு வலிமை தரும் வரகு கஞ்சி

nathan