வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் கோதுமையில் செய்த உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கோதுமை ரவை வெங்காய தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கோதுமை ரவை வெங்காய தோசை
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை – 1 கப்
தோசை மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 2
ப.மிளகாய் – 2
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தோசை மாவில், கோதுமை ரவையை போட்டு சிறிது உப்பு, வெங்காயம், ப.மிளகாய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து 1 மணிநேரம் வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இந்த மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சத்தான சுவையான கோதுமை ரவை வெங்காய தோசை ரெடி.
குறிப்பு :
இந்த தோசைக்கு சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.