23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
எடை குறையதொப்பை குறைய

உங்கள் கீழ் வயிறு / பெல்லி கொழுப்பை கரைக்க உதவும் அருமையான 5 ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள்

aerobic-exercise-to-reduce-belly-fat-150x150

உங்களுக்கு உடம்பிற்கு கச்சிதமான மற்றும் அழகான உடைகளை அணிய வேண்டும் என்று ஆசையாக உள்ளதா? மேலும் உங்கள் பெல்லி பார்ட்டி அல்லது விடுமுறை காலங்களில் வெளியில் செல்லும் போதெல்லாம் உங்களை சங்கடப்படுத்துகிறதா? பெல்லியானது நம் உடலில் ஏற்படும் பிடிவாதமான கொழுப்பால உருவாகிறது. எனவே இந்த கொழுப்பை குறைக்கவும், கூடுதல் பவுண்டுகளை சிந்தவும் கடுமையான உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமாகிறது.
சமீபத்திய ஆய்வின்படி,  தொப்பை கொழுப்பு அதிகரிப்பு இதய நோய்கள் அதிகரிப்புடன் நேர் விகிதத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, அது ஒரு நீண்ட ஆயுட்காலம் வேண்டும் பொருட்டு இடுப்பு அளவினை கட்டுப்படுத்துவது கட்டாயம் ஆகிறது. துரதிருஷ்டவசமாக, வயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்பை மட்டும் குறைப்பது என்பது சாத்தியம் அல்ல. எனவே, ஒட்டுமொத்த எடை குறைப்பு திட்டம் மட்டுமே செயல்படுத்தினால் இங்கே நடுப்பகுதியையும் குறைக்கமுடியும்.

ஒரு நல்ல ஊட்டச்சத்து உணவு திட்டமான‌து நம் உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்பு சேமிப்பினை குறைக்க நன்கு உதவும். கீரைகளும், காய்கறிகளும், பழங்கள், பால் மற்றும் மெலிந்த இறைச்சி ஒரு சீரான உணவு பொருத்தம் இவை எல்லாம் வலுவான வயிற்றை அடைய உதவும். ஒரு சுகாதார மற்றும் சமச்சீர் உணவுடன், ஏரோபிக் பயிற்சிகளும்; அதிகப்படியான கொழுப்புள்ள தொப்பையை குறைக்க உதவுவதோடு, ஒரு அழகான உடலை வெளிப்படுத்தவும் உதவுகிறது.
ஏரோபிக்ஸ் மூலம் தொப்பை கொழுப்பை எப்படி குறைப்பது:
கீழே கொடுக்கப்பட்ட ஏரோபிக் பயிற்சிகள் செய்வதன் மூலம் உங்களின் தொப்பை கொழுப்பை குறைக்கலாம். இதை நீங்கள் தினமும் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
1. ஓட்டப்பயிற்சி:
ஓட்டப்பயிற்சியானது நம் முழு உடலும் உடற்பயிற்சி செய்ய மிகவும் மூக்கியமான‌ வழியாக உள்ளது. இதன் முக்கிய காரணம் நாம் ஒவ்வொரு காலுக்கும் தரும் இயக்கத்தினால் நம் உடல் முழுமைக்கும் சீரான உடற்பயிற்சியாக இருக்க இது உதவுகிறது. மேலும் ஒவ்வொரு காலுக்கும் நல்ல உடற்பயிற்சியாக இது உள்ளது. இது நம் உடலின் அனைத்து பாகத்திற்கும் நன்கு வேலை செய்கிறது. நீங்கள் எப்போதாவது தொப்பையுடன் ஓடுபவரை பார்த்து இருக்கிறீர்களா? எனவே படிப்படியாகவும் கால மற்றும் தீவிரமாக‌ கட்டமைப்பதையும் மனதில் கொண்டு இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
2. நீச்சல்:
தண்ணீரானது நம் உடல் பாகங்கள் முன்னும் பின்னும் இயன்கும் போது இயற்கையாக ஒரு எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. எனவே நீச்சல் ஒரு சிறந்த முழுமையான உடல் பயிற்சி ஆகும். இது வயதானவர்களுக்கும், அதிக எடை உள்ளவர்களுக்கும் மிகச்சிறந்த ஒன்றாக இருப்பதோடு, நடைபயிற்சி போன்ற தரையில் செய்யும் பயிற்சிகளாக் ஏற்படும் மூட்டு வழி போன்ற‌ எந்த பாதிப்பும் இருக்காது. இந்த உடற்பயிற்சி வளர்சிதை மாற்ற விகிதத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் உடல்  ஓய்வாக இருக்கும் போது கூட கலோரிகளை எரிக்கிறது.
3. நடைபயிற்சி:
நாம் அனைவரும் தினமும் நடக்கிறோம் ஆனால் இன்னும் நாம் ஒரு வடிவான் உடல் அமைப்பை பெற வில்லை ஏன்? ஏனென்றால் ந‌டைபயிற்சியை நீங்கள் 10 நிமிடங்களுக்கு மேல் தொடராததுதான் காரணம். இந்த நடைப்பயிற்சி நம் மூட்டுகளுக்கு மிகவும் நல்லது மேலும், நீங்கள் உங்கள் நடைப்பயிற்சியை அதிகமாக்க உங்களை சுற்றியுள்ள இயற்கையின் மகிழ்ச்சியோடு ஒன்றினாலே போதும், நீங்கள் சோர்வில்லாமல் அதிக நேரம் மிகவும் ஈடுபாடோடு நடைபயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த ஏரோபிக் உடற்பயிற்சி தொப்பை கொழுப்பை இழக்க எளிமையானதாக இருக்கிறதுறது.
4. சைக்கிள் ஓட்டுதல்:
இந்த இணையதளம் ஏற்கனவே சைக்கிள் பயிற்சியுன் மூலம் ஏற்படும் நன்மைகளை பல தடவை  பல க‌ட்டுரைகள் மேலம் சொல்லி இருக்கிறது. இந்த பயிற்சியினால் விலைமதிப்பற்ற எரிபொருளை சேமிக்க உதவுவதோடு, இது ஒரு சிறந்த கொழுப்பு எரிக்கும் உடற்பயிற்சியாக‌ உள்ளது. மீண்டும், இது மூட்டுகளிக்கு நல்ல பயிற்சியை தருவதோடு, அதிகப்படியான கலோரிகளை குறைப்பதற்கும் இது மிகவும் உதவியாக உள்ளது.
5. எடை பயிற்சி:
உடற்பயிற்சி கூடத்திற்கு போவதா. அது போல இது எளிது. பளு தூக்குவதால ஏற்படும் உடல் நன்மைகள் மட்டும் இன்றி நம் உடலை கட்டுக் கோப்போடு வைத்திருக்க உதவுகிறது, மேலும் இது நம் வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும் மிகவும் உதவுகிறது. பளு தூக்கும் பயிற்சி கூட ஏரோபிக்ஸ் பயிற்சியின் ஒரு பகுதியாகும். நாம் ஓய்வாக  இருக்கும் போது கூட நம் கலோரியை மிக உயர்ந்த விகிதத்தில் எரிக்க‌ ஊக்குவிக்கிறது.
எச்சரிக்கையுடன் ஒரு வார்த்தை: படிப்படியாக ஒரு தொழில்முறை பயிற்சியாளர் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே இந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
கொழுப்பை இழக்க வேண்டும் என்றால், எந்த சந்தேகமும் இன்றி கடின உழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால் நான் மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சிகளை, வகையான செயல்முறை மூல செய்வது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவ்வப்போது இடைவெளி விட்டு உடற்பயிற்சி செய்வதால் மிக அதிக அளவில் கலோரியை குறைப்பது நிச்சயம். உதாரணமாக, சில 100 மீட்டர் வேகம் அல்லது சைக்கிள் பயிற்சி 30 விநாடிகள் என இந்த அனைத்து முயற்சிகளையும் சேர்க்கலாம். இந்த ஆற்றல்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தினை மீண்டும் புத்துயிர் பெற உதவும்.
கருத்து பகுதியில் உங்கள் மதிப்புமிக்க அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

உடல் பருமனை அதிரடியாக குறைக்கும் “பேலியோ” டயட் முறைக்கு உதவும் சமூக வலைதளம்!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த பொருளை நாக்கின் அடியில் வைத்தால் உடல் எடை வேகமாக குறையும்!

nathan

10 நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்க உதவும் ஆசிய டயட் பற்றி தெரியுமா?

nathan

இந்த பழக்கவழக்கங்கள்தான் உடல் பருமனாவதற்கு காரணம்.!

nathan

எடை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

குண்டு பெண்களே இது உங்களுக்கு………

nathan

உடல் எடையை குறைப்பதில் கைகொடுக்கும் மருத்துவக் குணம் நிறைந்த முட்டைகோஸ்!

nathan

பானைப் போன்ற தொப்பை இந்த நோய்களை உண்டாக்கும்

nathan

உடல் எடை குறைய எளிய மருத்துவம்

nathan