25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
Ojtigkt
சிற்றுண்டி வகைகள்

ஈசி கொத்து  புரோட்டா

என்னென்ன தேவை?

கோதுமை புரோட்டா – 5,
முட்டை – 2,
துருவிய கேரட் – 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக அரிந்த பச்சைமிளகாய் – 2,
வெங்காயம் – 3,
கறிவேப்பிலை – சிறிது,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
லெமன் சாறு – 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
தக்காளி – 1/2,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கோதுமை புரோட்டா மீந்துள்ளதை, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டவும். முட்டையில் சிறிது மிளகு, பச்சை மிளகாய், கேரட், உப்பு போட்டு தோசை போல் ஊற்றி சின்ன துண்டுகளாக வெட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் + வெண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை, சோம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், உப்பு தூவி வதக்கி வெட்டி வைத்துள்ள புரோட்டா, முட்டை சேர்த்து கிளறி சிறிது லெமன் சாறு தெளித்து கிளறி இறக்கவும். முட்டையை மசாலாவில் ஊற்றி வேகவைத்தும் புரோட்டா சேர்த்து கிளறலாம்.Ojtigkt

Related posts

சத்து நிறைந்த ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan

கேழ்வரகு ஸ்டப்டு இட்லி

nathan

உளுந்து வடை

nathan

பழநி பஞ்சாமிர்தம்

nathan

இஞ்சித் துவையல் வகைகள்!

nathan

இந்த கேக் செய்து பாருங்க- 10 நிமிஷத்தில் காலியாகிடும்

nathan

சத்தான கேழ்வரகு இட்லி

nathan

சூப்பரான முட்டை கொத்து பரோட்டா

nathan

மரவள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

nathan