24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
VWHq1vZ
மருத்துவ குறிப்பு

சிறுநீரக கற்களை கரைக்கும் சிறுகண்பீளை

தோட்டத்தில், சாலையோரங்களில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிதான பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீரக கற்களை கரைக்க கூடியதும், மாதவிலக்கு பிரச்னையை போக்கவல்லதும், புண்களை ஆற்றும் தன்மை கொண்டதுமான சிறுகண்பீளையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.
ஈரலில் ஏற்படும் பிரச்னையை சரிசெய்யும் அற்புதமான மருந்தாகிறது சிறுகண்பீளை. இது, உள் உறுப்புகளின் அழற்சியை போக்குகிறது. கற்களை கரைக்கும் வல்லமை உடையது. வெள்ளைபோக்கு பிரச்னையை குணமாக்கும். புண்களை ஆற்றக் கூடியதாக விளங்குகிறது. சீத, ரத்த கழிச்சலை நிறுத்தும் தன்மை கொண்டது. கண்களில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்துகிறது. சிறுகண்பீளையின் பூக்கள், இலை, தண்டு, வேர் என அனைத்து பகுதிகளும் மருந்தாகிறது. தை மாதத்தில் அதிகம் கிடைக்கும் இந்த சிறுகண்பீளையை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிறுகண்பீளை, பனங்கற்கண்டு, பால்.

செய்முறை: சிறுகண்பீளையின் இலை, பூக்கள், தண்டு, வேர் ஆகியவற்றை அரைத்து பசையாக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு நிற்கும். வலி குறையும். உடல் வலிமை பெறும். மாதவிலக்கால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, ரத்தசோகை, சோர்வு, உடல் மெலிவு போன்றவற்றுக்கு மருந்தாகிறது.
சிறுகண்பீளையை கொண்டு சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிறுகண்பீளை, கருஞ்சீரகம், சிறுநெறிஞ்சில் பொடி, பனங்கற்கண்டு.

செய்முறை: சிறுகண்பீளை செடியை சிறுசிறு துண்டுகளாக்கி பாத்திரத்தில் போடவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் சிறுநெறிஞ்சில் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர சிறுநீரக பை, சிறுநீர் பாதை, பித்தப்பை, ஈரல் ஆகியவற்றில் ஏற்படும் கற்கள் கரையும். இடுப்பு வலி, வயிற்று வலி, சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளியேறுதல், வாந்தி, குமட்டல் பிரச்னைகளை குணப்படுத்தும் மருந்தாக சிறுகண்பீளை விளங்குகிறது.சிறுகண்பீளையை பயன்படுத்தி புண்கள், கொப்புளங்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிறுகண்பீளை, தேங்காய் எண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் சிறுகண்பீளை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை வடிக்கட்டி பூசிவர அடிபட்ட காயம், புண், அக்கிப்புண், கொப்புளங்கள் விரைவில் குணமாகும்.

புல்லோடு புல்லாக இருக்கும் சிறுகண்பீளை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்க கூடியது. புண்களை வடு தெரியாமல் ஆற்றும் தன்மை கொண்டது. கொழுப்பை கரைக்க கூடியது. ரத்த நாளங்களில் கொழுப்பு சேர்ந்து மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் மருந்தாக விளங்குகிறது. முகப்பருக்களை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு திருநீற்று பச்சை மருந்தாகிறது. திருநீற்று பச்சையை அரைத்து சாறு எடுத்து முகப்பருக்கள் மீது போடுவதால் பருக்கள் வடு தெரியாமல் மறைந்து போகும்.VWHq1vZ

Related posts

நகம் கடிக்கும் பழக்கம் இருக்குதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

சூப்பர் டிப்ஸ்! நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான மிக முக்கிய மருத்துவக்குறிப்புகள்

nathan

பெண்களே…. இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள்!

nathan

80 விதமான வாதநோய்களைப் போக்கும் தழுதாழை!

nathan

இந்த அறிகுறிகளை சாதாரணமா எடுத்துக்கிட்டா உயிரே போயிடும்…

nathan

நீங்கள் தினமும் அதிகம் சாப்பிட கூடாத 5 உணவுகள்!அவசியம் படிக்க..

nathan

காதலியிடம் தன் காதலைச் சொல்ல‍த் தயங்கும் காதலர்களுக்கேற்ற‌ பயனுள்ள‍ ஆலோசனை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பக புற்றுநோய் ஏற்பட இதுவும் முக்கிய காரணம்

nathan

உங்களுக்கு தெரியுமா கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் தரும் சோம்பு…!

nathan