23.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024
PRIYANKA 10189
மருத்துவ குறிப்பு

H1B விசாவால் யாருக்கு பலன், யாருக்கு பாதிப்பு! – அமெரிக்கவாழ் இந்தியரின் விளக்கம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார் வாசகி பிரியங்கா ராமன். அமெரிக்காவில், இந்தியர்கள் சந்திக்கும் ஹெச்1பி விசா பிரச்னைகள் குறித்த சூழலை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

”என் கணவர் இங்கு (அமெரிக்காவில்) வேலை பார்க்கிறார். ஹெச்1பி விசா மூலமாக வந்தார். அவருடன் இருப்பதற்காக நான் ஹெச்4 விசாவில் அமெரிக்கா வந்தேன். பொதுவாக, ஹெச்1பி விசா மூலமாக அமெரிக்கா வருபவர்கள், ஆறு வருடங்கள் இங்கு தங்கி வேலை பார்க்கலாம். அதற்குப் பிறகு கிளம்பி விட வேண்டும். இதுதான் இந்த விசாவுக்கான வழிமுறை” என்றவர் அமெரிக்காவில் நிலவும் விசா அச்ச சூழல் குறித்த முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்…

* ”தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வரும் வெளிநாட்டினரின் அடிப்படை சம்பளம் வருடத்திற்கு 60,000 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அது 1,30,000 டாலராக மாற்றியமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

* பொதுவாக அமெரிக்காவில் வேலைபார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசாவை, 60% மேல் இந்தியர்கள்தான் பெறுகிறார்கள். இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் சம்பளத்தால், அமெரிக்காவில் சம்பாதிக்கும் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு செலுத்தும் வரி அதிகரிக்கும். இன்னொரு பக்கம், தங்களின் கன்சல்டன்ஸிக்குக் கொடுக்க வேண்டிய தொகையும் அதிகரிக்கும். மேலும், இந்தியர்களை வேலைக்கு எடுக்கும் ஐடி நிறுவனங்கள், இந்த உயர்த்தப்பட்ட சம்பளத்தை ஊழியர்களுக்குக் கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும். இவையெல்லாம் அமெரிக்காவில் ஹெச்1பி விசா பெறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைக்கச் செய்யும் என்பதுதான், ட்ரம்பின் எதிர்பார்ப்பு.

* அமெரிக்காவில் வசிக்கும் ஹெச்1பி விசா பணியாளர்களில் ஆறு வருடங்களை நிறைவு செய்ய இன்னும் இரண்டு, மூன்று வருடங்கள் இருப்பவர்களுக்கு இது இக்கட்டான சூழல்தான். ஆறு வருடங்கள் முடிந்தவர்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை.

* என்றாலும், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான எண்ணிக்கை வரம்பு குறைக்கப்படவில்லை. இதனால் அமெரிக்காவுக்குச் பணிக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையில் மாற்றமிருக்காது. ஆனால், தகுதியான நபர்கள் மட்டும் பணிவாய்ப்புப் பெற முடியும். இது திறமையாளர்களுக்கு சாதகமான விஷயம்தான்.

* கணவன், மனைவி இருவரும் ஹெச்1பி விசாவில் சென்றிருந்தால் பிரச்னை இல்லை. இப்படி இருவரும் பணிபுரிவது கணிசமே. கணவனுக்கு மனைவியோ, மனைவிக்கு கணவனோ உதவியின் பெயரில் சென்றிருப்பவர்கள் திரும்பி வரவேண்டிய சூழல் இருக்கிறது. இனிமேல் புதிதாக ஆன் சைட் வேலைக்காக அமெரிக்கா செல்பவர்களுக்கு இந்த விசாவின் காரணமாக பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

* கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட, ஹெச்1பி விசா விஷயத்தில் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அதற்கான சட்ட மசோதா இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. கூடவே, சோமாலியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய மட்டுமல்ல அமெரிக்காவிற்குள் வரவே ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.

* தற்போது ஏர்போர்ட்டில் செய்யப்படும் செக்கிங் மிகவும் ஸ்ட்ரிட்டாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அமெரிக்காவுக்குள் செல்ல முடியாமலும், தங்களுடைய உடமைகளை எடுக்க முடியாமலும் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.

* எஃப்1 விசா படிக்கும் மாணவர்களுக்கும்,எஃப்2 விசா மாணவருடன் வருபவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. இப்படி படிப்பு நிமித்தமாக அமெரிக்காவிற்கு வந்து, படிப்பு முடித்த பிறகு இங்கேயே வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்பவர்களுக்கு விசாவில் பிரச்னை இருக்காது.

* விசா தொடர்பாக அமெரிக்காவில் எழுந்திருக்கும் இந்தப் பிரச்னை காரணமாக, ஐடி துறையில் அபார வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் சீனாவுக்கு இனி எல்லோரும் படையெடுக்க ஆரம்பிப்பார்கள் என அமெரிக்காவில் பேசப்படுகிறது.

* அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்பது அதிபர் ட்ரம்பின் நிலைப்பாடு. அவர் அப்படி நினைப்பதிலும் தவறில்லை. தேசத்தின் மீது அக்கறை உள்ள அதிபர் எடுத்திருக்கும் முடிவு அந்த நாட்டினருக்குச் சரியே. அதே நேரத்தில் இந்தியர்களுக்கு இந்த வேலை இழப்பு பாதிப்புதான்." PRIYANKA 10189

Related posts

விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள். கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க.

nathan

உங்களுக்கு தெரியுமா உயிரை பறிக்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்!!

nathan

பெற்றோர்களே ஆட்டிஸம் பாதித்த குழந்தை மீது அன்பு செலுத்துவது எப்படி

nathan

இதோ எளிய நிவாரணம்! வறட்டு இருமலை முற்றிலும் நீக்கும் மஞ்சளின் மருத்துவ பயன்கள்…!!

nathan

சிறுநீரக கற்களை நீக்க அல்லது வெளியேற்ற, சரிசெய்ய நவீன சிகிச்சைகள்…

sangika

முருங்கைக்கீரை குழந்தையின்மை குறை போக்கும்!

nathan

கர்ப்பிணிகள் அவசியம் செய்ய வேண்டிய 4 மூச்சுப் பயிற்சிகள்!!

nathan

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

நரம்புகள் பலம் பெற

nathan