31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
இனிப்பு வகைகள்

சத்து நிறைந்த வரகு – கோதுமை பணியாரம்

இன்று காலை சிற்றுண்டியாக சிறுதானியங்களில் ஒன்றான வரகு மாவுடன் கோதுமை மாவை சேர்த்து சத்துநிறைந்த பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த வரகு – கோதுமை பணியாரம்
தேவையான பொருட்கள் :

வரகரிசி மாவு – ஒரு கப்,
கோதுமை மாவு – அரை கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி – அரை கப்,
வாழைப்பழம் – 2,
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை :

* வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வரகரிசி மாவு, கோதுமை மாவுடன் மசித்த வாழைப்பழம், வெல்லம் அல்லது கருப்பட்டி வடிகட்டிய கரைசல் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கலக்க வேண்டும்.

* குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றவும்.

* இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

* வரகு – கோதுமை பணியாரம் தயார்.

Related posts

பலாப்பழ பாயாசம்

nathan

தொதல் – 50 துண்டுகள்

nathan

சுவையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

nathan

கலர்ஃபுல் தேங்காய் பால்ஸ்

nathan

தீபாவளிக்கு சுவையான வேர்க்கடலை கட்லி

nathan

ஆப்பிள் அல்வா

nathan

தீபாவளி ஸ்பெஷல்: தேங்காய் லட்டு

nathan

எக்லஸ் கேரட் புட்டிங்

nathan

சுவையான தேங்காய் அல்வா

nathan