31.5 C
Chennai
Thursday, Jul 3, 2025
201702010901310863 Bajra green gram puttu SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்தான கம்பு – பச்சைப்பயறு புட்டு

தினமும் காலையில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது புத்துணர்ச்சியை தரும். இன்று கம்பு, பச்சைப்பயிறு வைத்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான கம்பு – பச்சைப்பயறு புட்டு
தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – ஒரு கப்,
முளைவிட்ட பச்சைப்பயறு, துருவிய வெல்லம், தேங்காய்த்துருவல் – தலா அரை கப்,
நெய் – ஒரு தேக்கரண்டி.

செய்முறை :

* வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆறவிடவும்.

* ஒரு பாத்திரத்தில் அந்த மாவை போட்டு அதில் வெதுவெதுப்பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசிறவும்.

* புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப்பயறு, வெல்லம், தேங்காய்த்துருவல் என்ற துறையில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

* சுவையான கம்பு – பச்சைப்பயறு புட்டு தயார்.201702010901310863 Bajra green gram puttu SECVPF

Related posts

இட்லி உப்புமா செய்வது எப்படி

nathan

வெஜ் சாப்சி

nathan

கோதுமை அடை பிரதமன்

nathan

கைமா இட்லி

nathan

சத்தான கேழ்வரகு இட்லி

nathan

கோதுமை மாவு சப்பாத்தி

nathan

சுவையான சத்தான கேழ்வரகு – புதினா அடை

nathan

எளிமையாக செய்யக்கூடிய ஜவ்வரிசி உப்புமா

nathan

மசாலா பராத்தா

nathan