31.7 C
Chennai
Saturday, Jun 1, 2024
12 1476254913 10 turmeric
ஆண்களுக்கு

ஆண்களே! இரண்டே நாட்களில் முகத்தில் இருக்கும் பருக்களைப் போக்க வேண்டுமா?

எப்படி தலைமுடி உதிர்வது பெரும் பிரச்சனையாக உள்ளதோ, அதற்கு இணையாக முகப்பரு பிரச்சனையால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகம். குறிப்பாக ஆண்கள் அதிகம் வெளியே சுற்றுவதாலும், முறையான பராமரிப்புக்களை சருமத்திற்கு கொடுக்காததாலும், முகப்பருவால் மிகுந்த அவஸ்தைப்படுகின்றனர்.

இந்த முகப்பருவைப் போக்க பல க்ரீம்களை வாங்கி சருமத்திற்குப் பயன்படுத்தியும் எந்த ஒரு பலனும் கிடைக்காமல் தவிக்கின்றனர். ஆனால் இயற்கை வழிகள் முகப்பருவிற்கு நல்ல பலனை வழங்குவதோடு, நிரந்தர தீர்வை வழங்கும் என்பதால், தமிழ் போல்ட் ஸ்கை முகத்தில் இருக்கும் பருக்களைப் போக்க உதவும் சில இயற்கை வழிகளைக் கொடுத்துள்ளது.

டூத் பேஸ்ட் இது அனைவரது வீட்டிலும் இருக்கும் ஓர் பொதுவான அத்தியாவசிய பொருள். இந்த டூத் பேஸ்ட்டை பருக்களின் மீது வைத்து, 1 மணிநேரம் கழித்து கழுவுங்கள். இதனால் பருக்கள் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

புதினா புதினாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினாலும், அதில் உள்ள குளிர்ச்சித் தன்மையாலும், சருமத்தில் இருக்கும் பிரச்சனைகள் விலகும். அதற்கு புதினாவை அரைத்து, முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஆவி பிடிப்பது சுடுநீரால் ஆவி பிடிப்பதன் மூலம் சருமத்துளைகள் விரிவடைந்து, அதனுள் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, அழுக்குகளின் தேக்கத்தால் ஏற்படும் பருக்கள் வருவதும் தடுக்கப்படும். இந்த முறையை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

ஐஸ் பேக் ஐஸ் கட்டி, சருமத்தில் இருக்கும் அழுக்குளை வெளியேற்றி, முகப்பரு பிரச்சனைகளைத் தடுக்கும். அதற்கு ஒரு துணியில் ஐஸ் கட்டியை வைத்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், முகப்பரு வருவது தடுக்கப்படும்.

தேன் தேனை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 3 முறை செய்தால், பரு பிரச்சனையே வராது.

பப்பாளி பப்பாளி உடலினுள் உள்ள உட்காயங்களைக் குறைக்கும் மற்றும் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சரும செல்களுக்கு பாதுகாப்பை வழங்கி, பிம்பிள் பிரச்சனையைத் தடுக்கும். அதற்கு பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

ஆரஞ்சு தோல் ஆரஞ்சு தோல் பொடியுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் கழித்து, கழுவ நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முட்டை வெள்ளைக்கரு முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பருக்கள் போய்விடும்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரை நீருடன் சரிசம அளவில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, அப்படியே விடுங்கள். குறிப்பாக இந்த முறை எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது.

மஞ்சள் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடியுடன் நீர் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வர, முகத்தில் இருக்கும் பிம்பிள் மறைந்துவிடும்.

12 1476254913 10 turmeric

Related posts

ஆண்களே! முடி கொட்டாமல் தடுக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

ஆண்களுக்கு சொட்டை விழுவதற்கான காரணங்கள் இவைதான் !!

nathan

இதை இவ்வாறு சாப்பிட்டால் இயற்கை வயாகரவாகவே செயல்படும்!…

sangika

ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்க தேங்காய்!…

sangika

வழுக்கை வராமல் தடுக்க

nathan

ஆண்மை அதிகரிக்க பனங்கற்கண்டின் நன்மைகள்!…

sangika

ஆண்களே! மென்மையான தாடி வேண்டுமா? அப்ப இத தினமும் யூஸ் பண்ணுங்க…

nathan

ஆண்களே…மனம் தளர வேண்டாம்!

nathan

முக வாட்டத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்!….

sangika