27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
GdoKCzH
சிற்றுண்டி வகைகள்

மிலி ஜுலி சப்ஜி

என்னென்ன தேவை?

ஃப்ரெஷ்ஷான விருப்பமான காய்கறிகள்
பீன்ஸ் – 10,
உருளைக்கிழங்கு – 2,
பச்சைப்பட்டாணி – 1/2 கப்,
காலிஃப்ளவர் சிறியது – 1,
கேரட் – 3,
பிஞ்சு பேபிகார்ன் – 3,
குடைமிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) – தலா பாதி,
முட்டை கோஸ் – ஒரு சிறு துண்டு.

அரைக்க…

வெங்காயம் பெரியது – 2,
தக்காளி பெரியது – 2 (இரண்டையும் தனித்தனியாக விழுதாக அரைக்கவும்),
பச்சைமிளகாய் கீரியது – 2,
இஞ்சி, பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு, மல்லித்தழை – தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1 டீஸ்பூன், கரம்மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

குக்கரில் போதுமான தண்ணீரில் காய்கறிகளை நறுக்கி போட்டு ஒரு விசில் வரும்வரை வேக விடவும். காய்கறிகள் நறுக்கென்று இருக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, வெங்காய விழுது, இஞ்சி, பூண்டு, தக்காளி விழுது என்று ஒவ்வொன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

அனைத்தும் பொன்னிறமானதும் உப்பு, தூள்கள் போட்டு நன்கு வதக்கி, வெந்த காய்கறிகளையும் போட்டு நன்றாக வதக்கவும். உதிரி உதிரியாக, டிரையாக வேண்டுமென்றால் தண்ணீர் ஊற்றாமல் மல்லித்தூவி இறக்கவும். கிரேவியாக வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் சேர்த்து இறக்கவும். ரைஸ், பூரி, ரொட்டி, புலாவுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும் இந்த டிஷ்.GdoKCzH

Related posts

இனிப்பு பொங்கல் எப்படி செய்வது? இதோ….

nathan

ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ்

nathan

ஆப்பிள் பஜ்ஜி

nathan

பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் உருளைக்கிழங்கு பால்ஸ்

nathan

கொண்டைக்கடலை கட்லெட்

nathan

வெஜிடபிள் பாட் பை

nathan

சுவையான அவல் உப்புமா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா

nathan