27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
9 2058498f 1
​பொதுவானவை

கத்திரி வாழைப்பூ தொக்கு

என்னென்ன தேவை?

கத்திரிக்காய் – 3

வாழைப்பூ – 50 கிராம்

லவங்கப்பட்டை – சிறு துண்டு

பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்

தக்காளி சாறு – 1 கப்

கடுகு – சிறிதளவு

இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கத்திரிக்காயை வெட்டி, லேசாக எண்ணெய் விட்டு வதக்கவும். நறுக்கிய வாழைப்பூவுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, லவங்கப்பட்டை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சாறு, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வேகவைத்த வாழைப்பூ, வதக்கிய கத்திரிக்காய் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.9 2058498f

Related posts

இணையதள குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ள பெண்களுக்கு யோசனைகள்

nathan

செல்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்த சில யோசனைகள்! ~ பெட்டகம்

nathan

சத்தான சுவையான உளுந்து கஞ்சி

nathan

செட்டிநாடு குழம்பு மிளகாய் பொடி

nathan

பெண்களே காதல் தோல்வியிலிருந்து விடுபட வழிகள்

nathan

சூப்பரான கேழ்வரகு மசாலா பூரி

nathan

எள்ளு மிளகாய் பொடி

nathan

கண்டதிப்பிலி ரசம்

nathan

கொழுப்பைக் கரைக்க கொள்ளு ரசம்

nathan