என்ன தான் காலநிலை மாறினாலும், வெயிலின் தாக்கம் மட்டும் குறையவில்லை. வெயில் கடுமையாக அடிப்பதால், சருமம் கருமையடைகிறது. வெள்ளைத் தோலின் மீது நம் மக்களுக்கு மோகம் அதிகம். எனவே ஒவ்வொருவரும் தங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க விரும்பி, பல முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
அதில் க்ரீம்களைத் தான் வாங்கிப் பயன்படுத்துவார்கள். க்ரீம்கள் அனைத்தும் தற்காலிகமானது தான். ஆனால் இயற்கை வழிகளைப் பின்பற்றினால், அது நிரந்த தீர்வை வழங்குவதோடு, சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்கை இரவில் படுக்கும் முன் போட்டால், சரும கருமை நீங்கி, சீக்கிரம் வெள்ளையாகலாம்.
தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் தயிர் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு ஒன்றாக சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை: பிறகு கலந்து வைத்துள்ள கலவையை கருப்பாக இருக்கும் முகம், கை, கால்களில் தடவி, 20-25 நிமிடம் நன்கு உலர வைக்கவும். பின்பு நீரைப் பயன்படுத்தி அப்பகுதியை சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
எத்தனை முறை செய்யலாம்? இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 3 முறை இரவில் படுக்கும் முன் செய்ய, நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இந்த மாஸ்க்கைப் பயன்படுத்திய பின், சோப்பைப் பயன்படுத்தக் கூடாது.
இதர நன்மைகள் இந்த மாஸ்க்கைப் போட்டால், சரும கருமை நீங்குவதோடு, முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், இறந்த செல்கள், பருக்கள் போன்றவை நீங்கி, சருமம் பட்டுப் போன்று மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.