முகப் பராமரிப்பு

அடேங்கப்பா! செ க்ஸி யான உடலைப் பெற பிபாசா பாசு என்னலாம் செய்றாங்க தெரியுமா?

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் பிபாசா பாசு. இவருக்கு ஃபிட்னஸ் மீது அலாதியான பிரியம் உள்ளது. இதனால் தான் 39 வயதாகியும் இவர் இன்னும் சிக்கென்ற உடலுடன் செக்ஸியாக காட்சியளிக்கிறார். மேலும் ஃபிட்னஸ் மீது கொண்ட ஆர்வத்தினால் தான் லவ் யுவர்செல்ப் என்ற பெயரில் ஃபிட்னஸ் டிவிடி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த டிவிடியின் முக்கிய நோக்கம் ஆரோக்கியம் மற்றும் வலிமையுடன் இருப்பது தான்.

 

இந்த ஃபிட்னஸ் டிவிடியில் உடல் எடையைக் குறைப்பதற்கான 60 நாள் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிபாசா பாசு மற்றொரு டிவிடி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் எலும்புகளை வலிமைப்படுத்தும் மற்றும் ஒருங்கிணைக்கும் பயிற்சிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பெங்காலி அழகி கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்பவர்.

இவர் ஒரு நாள் கூட உடற்பயிற்சி செய்ய தவறியதில்லை மற்றும் இவர் புகை, மது என்ற எந்த ஒரு கெட்ட பழக்கத்தையும் ஒருமுறை கூட முயற்சித்ததில்லை. ஏனெனில் இது உடல் ஆரோக்கியம் மற்றும் ஸ்டாமினாவை அழித்துவிடும் என்பதால் தானாம். இக்கட்டுரையில் நடிகை பிபாசா பாசுவின் உடற்பயிற்சி மற்றும் டயட் டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கார்டியோ பயிற்சி

கார்டியோ உடற்பயிற்சிகள் உடலில் இருந்து கொழுப்புக்களைக் கரைப்பதில் மிகவும் சிறந்தது. முக்கியமாக இந்த பயிற்சி அடிவயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்புக்களை குறி வைத்து வெளியேற்றி, அழகிய இடை மற்றும் தொடையைப் பெற உதவும். மேலும் இந்த பயிற்சியை செய்வதால் மன அழுத்தம் குறைவதோடு, இதயம், நுரையீரல் வலிமையாவதோடு, இதய நோயின் அபாயம் குறையும்.

சரிவிகித டயட்

பிபாசா பாசு ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் சுவையான உணவுகளைத் தான் எப்போதும் சாப்பிடுவாராம். அதிலும் அவர் தான் சாப்பிடும் உணவுகளில் அனைத்து சத்துக்களும் இருக்கும்படி, காய்கறிகள், பழங்கள் என அனைத்தையும் தனது அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து வருவாராம். குறிப்பாக தினமும் வேக வைத்த மீன், பச்சை காய்கறிகள், க்ரீன் டீ, ஓட்ஸ், தானியங்கள், அரிசி, சப்பாத்தி மற்றும் நட்ஸ் போற்வற்றை அன்றாட உணவில் சேர்ப்பாராம்.

இளநீர்

பிபாசா நாள் முழுவதும் போதிய அளவு நீரைக் குடிக்க வேண்டுமென பரிந்துரைக்கிறார். இவர் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடமாட்டார். மாறாக பழச்சாறு மற்றும் இளநீர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானங்களைத் தேர்ந்தெடுத்து குடிப்பாராம். இதனால் தான் இவரது சருமம் பொலிவாக உள்ளது.

யோகா

பிபாசா யோகாவின் மீது அதிக விருப்பம் கொண்டவர். இவர் தினமும் 108 சூரிய நமஸ்காரத்தை செய்வாராம். ஒரு நாளை சூரிய நமஸ்காரம் செய்து தான் ஆரம்பிப்பாராம். இதனால் ஒட்டுமொத்த உடல் செயல்பாடும் சிறப்பாக தூண்டப்பட்டு, உடல் பிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமாம். முக்கியமாக இப்படி செய்வதால், நினைவாற்றல், ஒருமுகப்படுத்தும் திறன், மூளையின் செயல்பாடு போன்றவை அதிகரிக்கும் எனவும் பிபாசா கூறுகிறார்.

ஜங்க் உணவுகள்

ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் பருமன், சர்க்க நோய் மற்றும் இதர நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் ஜங்க் உணவுகள் இடுப்பளவை அதிகரிப்பதோடு, மூளையில் தீவிர ஆபத்தை உண்டாக்கும். இவருக்கு இனிப்பு உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் அவற்றை வார இறுதியில் தான் அளவாக சுவைப்பாராம்.

தூக்கம்

ஒருவருக்கு தூக்கம் சரியான அளவில் கிடைத்தாலே, உடல் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். பிபாசா பாசு தினமும் சரியான அளவில் தூக்கத்தை மேற்கொள்வாராம். இதனால் உடலுக்கு போதிய ஓய்வு கிடைத்து, உடல் பருமன் அதிகரிக்காமலும் இருக்கும் என்றும் கூறுகிறார்.

எலுமிச்சை நீர்

பிபாசா பாசு தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பாராம். இதனால் உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்படுகிறது. அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்து வந்தால், செரிமான பாதை சுத்தமாகி, செரிமான மண்டலத்தில் உள்ள சிட்ரிக் அமிலம், நொதிகளின் செயல்பாட்டை ஊக்குவித்து, செரிமானத்தை மேம்படுத்தும்.

கிக்பாக்ஸிங்

கிக்பாக்ஸிங் மிகவும் சிறப்பான உடற்பயிற்சி. இந்த பயிற்சி இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரித்து, கலோரிகள் அதிகமாக கரைய உதவிபுரியும். மேலும் கிக்பாக்ஸிங் கோபம், மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றைக் குறைக்க உதவும். அதோடு இது ஒட்டுமொத்த உடலையும் பயிற்சியில் ஈடுபடுத்துவதால், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் தசைகளின் வலிமையையும் அதிகரிக்கும்.

க்ரீன் டீ

பிபாசா பாசு க்ரீன் டீ பிரியை எனலாம். இவர் காலை மற்றும் மாலையில் தவறாமல் ஒரு கப் க்ரீன் டீயைக் குடிப்பாராம். க்ரீன் டீ நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுவதோடு, உடலை சிக்கென்று வைத்துக் கொள்ளவும் உதவி புரியும். இதற்கு இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர சத்துக்கள் தான் காரணம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button