26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201701261307081401 bajra vegetable kozhukattai SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்தான கம்பு காய்கறி கொழுக்கட்டை

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று காய்கறிகளை சேர்த்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான கம்பு காய்கறி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – 1 கப் (200 கிராம்)
தண்ணீர் – 1/2 கப்
வெங்காயம் – 2
நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி) – 3/4 கப்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணை – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

* வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் கம்பு மாவை போட்டு, 7 முதல் 8 நிமிடங்கள் கம்பு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து, சில நொடிகள் வதக்கவும்.

* பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பச்சைப்பட்டாணியை சேர்த்து வாணலியை சில நிமிடங்கள் மூடி வைக்கவும். அடிபிடிப்பது போல் இருந்தால் மட்டும், சிறிது தண்ணீர் தெளிக்கவும். காய்கறிகளில் உள்ள தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை சற்று ஆற விடவும்.

* காய்கறிக் கலவையை கம்பு மாவு இருக்கும் பாத்திரத்தில் போடவும். சுவைக்கேற்ப உப்பைக் சேர்க்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

* சுடுநீரை கம்பு மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு கையால் தொடும் சூட்டில் இருந்தால் அப்படியே நன்றாக சப்பாத்தி மாவு போல் உருட்டிப் பிசைந்து கொள்ளவும்.

* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

* உருட்டிய மாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.

* சத்தான கம்பு காய்கறி கொழுக்கட்டை ரெடி.201701261307081401 bajra vegetable kozhukattai SECVPF

Related posts

ஹரியாலி பனீர்

nathan

சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan

சுவையான கம்பு காய்கறி கொழுக்கட்டை

nathan

ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்

nathan

மழைக்காலத்தில் வீணாகிய சாதத்தில் சுவையான வடை செய்வது எப்படி? தெரிஞ்சிக்கங்க…

nathan

கேழ்வரகு ஸ்டப்டு இட்லி

nathan

ஜிலேபி,

nathan

ராகி டோக்ளா

nathan

முட்டைகோஸ் செட் ரொட்டி

nathan