23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
hair 1 19039
முகப் பராமரிப்பு

முகத்தில் வளரும் தேவையற்ற முடி..நீக்குவது எப்படி?

”பெண்கள் சிலருக்கு உதடுகளுக்கு மேல்புறமும், தாடைக்கு கீழ்புறமும் மீசை வளர்வதைப் பார்த்திருப்போம். ஆண்களின் உடலில் முடி வளர்வதைத் தூண்டும் ஹார்மோன்கள் பெண்களின் உடலில் சுரக்கும்போது முகத்தில் தேவையற்ற முடி வளர்கிறது. இந்த பிரச்னையால் பெண்கள் வெளியில் செல்லவே கூச்சப்படுவார்கள்.

முடி வளர்வதைத் தடுக்க பார்லர்களில் செய்யப்படும் த்ரெட்னிங் மேற்கொள்வதால் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதுடன் பக்க விளைவுகளும் ஏற்படும். அதனால் தேவையற்ற முடிகளை நீக்க ரேசரையோ அல்லது ஹேர் ரிமூவர் க்ரீம்களையோ உபயோகிக்காமல் இருப்பது நல்லது” எனக் கூறும் ‘கேர் அண்ட் க்யூர்’ அரோமா க்ளினிக்கின் நிர்வாகி கீதா அசோக், அதற்கான தீர்வுகளையும் நம்மிடம் பகிர்கிறார்.

குப்பைமேனி இலைப்பொடி, கோரைக் கிழங்குப் பொடி, கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் பொடி, அடுப்பு சாம்பல் ஆகிய அனைத்தையும் தலா 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும். இதில் இருந்து அரை டீஸ்பூன் எடுத்து, அதில் 10 சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேஸ்ட்டை தேவையற்ற முடிகள் உள்ள பகுதியில் தடவவும். பேஸ்ட் நன்கு காய்ந்ததும், போதுமான அளவுக்கு அழுத்தித் தேய்க்க… வேர்க்கால்கள் வலுவிழந்து உதிர்ந்துவிடும். இதைத் தொடர்ந்து 3 மாதங்கள் செய்து வர நாளடைவில் உதிர்வு நிகழும்.

அடுப்பு சாம்பல் கிடைக்காதவர்கள் தேங்காய் ஓட்டைக் கொளுத்தி அதன் மூலம் கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இயற்கை முறையில் செய்யும் இந்த முறையால் எந்த பக்க விளைவுகளும் இல்லை.hair 1 19039

Related posts

மூக்கு பராமரிப்பு

nathan

உங்களுக்கு தெரியுமா ஒரு நாளைக்கு 2 முறை இதை பூசினால் காணாமல் போகும் கருவளையம்..!

nathan

பளபளப்பான அழகான முகத்தை பெற கிரீன் டீயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

மங்கு குணமாகுமா?

nathan

வாய்ப்பகுதியை சுற்றியிருக்கும் கருமையை எப்படி போக்கலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா தயிரை பயன்படுத்தி செய்யப்படும் அழகு குறிப்புகள்…

nathan

சருமத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வெயிலில் கருத்துவிட்டதா முகம்?

nathan

தேஜஸான முகம் பெற என்ன செய்ய வேண்டும்?

nathan