வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் வீடு மகிழ்ச்சி தரும் இடமாக இருக்க வேண்டும். அதற்கு மிகவும் முக்கியமானது வீட்டின் சுவர்களை அழகாக வைத்துக் கொள்வதாகும். வீட்டில் உள்ள வரவேற்பரை படுக்கையறை மாணவர்கள் படிக்கும் அறை, சமையலறை ஆகியவற்றிற்கு ஏற்ப வீட்டின் சுவர்களுக்கு பெயிண்ட் அடிக்கலாம். வீட்டில் பல வண்ண வால்பேப்பர்களை ஒட்டிவைக்கலாம். வீட்டுச்சுவற்றை காலண்டர், போட்டோ, கடிகாரம் மட்டுமே பயன்படுத்தலாம். நாம் நேசிக்கும் குழந்தைகள் விரும்பும் தெய்வங்கள், அழகிய ஓவியங்கள் வெளியூருக்கு டூர் சென்று வந்த வாழ்க்கையின் மறக்க முடியாத புகைப்படங்கள் சிறுவயது குழந்தைகளின் படங்கள், பெற்றோர், வழிகாட்டியாக நினைக்கும் தலைவர்கள் ஆகியோரின் படங்களை ஒட்டிவைக்கலாம்.
வீட்டுச் சுவற்றில் இயற்கை காட்சிகள் நிறைந்த வண்ண வண்ண புகைப்படங்களை விற்கின்றனர். அந்தப் படங்களை வாங்கி வீட்டுச் சுவற்றில் ஒட்டிவைத்தால் இன்னும் மனதுக்கு இதமாக இருக்கும். வீட்டுச் சுவற்றினை அழகுப்படுத்திவைத்திருந்தால் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் பிரம்மிப்பார்கள். இன்னும் இரண்டு நாட்கள் உங்கள் வீட்டில் தங்கிவிட்டுப் போகலாமா என்று ஆசையுடனும் அன்புடனும் கேட்பார்கள். உங்கள் வீட்டு அலங்காரங்களை காப்பியடித்து தங்கள் வீட்டையும் அழகு படுத்திக் கொள்வார்கள். டூருக்கு போவது போல் நம் வீட்டுக்கு வருவார்கள். குழந்தைகள் வீட்டை விட்டு வெளியில் செல்ல மாட்டார்கள். ‘ஏ பையன் வீட்டிலேயே தங்குறது இல்ல’ என்று வருத்தப்பட வேண்டியதில்லை.