26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201701191527336193 Karnataka Special Vangi bath brinjal rice kathirikai saddam SECVPF
சைவம்

கர்நாடகா ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் (அ) வாங்கி பாத்

கர்நாடகாவில் இந்த கத்தரிக்காய் சாதம் அல்லது வாங்கி பாத் மிகவும் பிரபலம். இப்போது கத்தரிக்காய் சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கர்நாடகா ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் (அ) வாங்கி பாத்
தேவையான பொருட்கள் :

அரிசி – 1 கப்
கத்திரிக்காய் – 150 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – 2
கடுகு – 1/2 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
முந்திரி பருப்பு – 15
கறிவேப்பிலை – 1 இணுக்கு
பெருங்காயப்பொடி – 2 பின்ச்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் (விரும்பினால்)
புளித்தண்ணீர் – கால் கப்
உப்பு – தேவைக்கு.

வாங்கி பாத் பொடி :

முழு மல்லி – 3 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்,
கடலை பருப்பு – 1 ஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 2 ,
பட்டை – சிறு துண்டு,
கிராம்பு – 1
கொப்பரை தேங்காய் துருவியது – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

* அரிசியை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாங்கி பாத் பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* கத்தரிக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைபருப்பு, பெருங்காயப்பொடி போட்டு தாளித்த பின் முந்திரி பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய கத்திரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு வேக விடவும்.

* கத்திரிக்காய் வெந்த பின்பு புளித்தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.

* இப்போது வாங்கி பாத் பொடி 3 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

* எல்லாம் நன்கு சேர்ந்த பின்னர் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி உப்பு சரி பார்த்து இறக்கவும்.

* சுவையான வாங்கி பாத் ரெடி.

* வாங்கி பாத் பொடி கடைகளில் கிடைக்கும்.201701191527336193 Karnataka Special Vangi bath brinjal rice kathirikai saddam SECVPF

Related posts

பேச்சிலர் சமையல்: வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

சூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் தக்காளி தொக்கு

nathan

சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!

nathan

சப்பாத்தி உப்புமா

nathan

தயிர்சாதம்

nathan

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

nathan

சத்தான வெங்காய – மிளகு சாதம் செய்வது எப்படி

nathan

வெள்ளரிக்காய் தால்

nathan

மீல் மேக்கர் கிரேவி செய்முறை விளக்கம்

nathan